தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை கோவையில் வீடு புகுந்து போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் மட்டுமின்றி அவரது கணவர் உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மாநிலமகளிர் பாசறை பொறுப்பாளராக இருப்பவர் கார்த்திகா. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் சட்டசபை தொகுதியின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இடைத்தேர்தல் தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் விஜய் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சாலையில் வாக்குசேகரித்தது, காவல்நிலையத்தை முற்றுகையிட்டது, காவல்துறையின் பணிக்கு இடையூறு செய்தது என்று மொத்தம் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த 3 வழக்கின் அடிப்படையில் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கோவையில் வசித்து வரும் நிலையில் அங்கு சென்ற தாராபுரம் போலீசார் வீடு புகுந்து இருவரையும் கைது செய்தனர்.
