த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதன் முறையாக தான் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்று ‘தேர்தல் பிரச்சாரத்தில்’ பேசுவது போல் முதல்வராகியும் பேசியிருக்கிறார் என தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ‘மைக் செட்டிங்’ என்ற தலைப்பில் தனது வலைதளப்பக்கதில்,
‘‘பத்து நிமிடம் பேசுவதற்கு
பக்காவா
எழுதிக் கொடு”

“பத்து நாளாவது
நான்
மனப்பாடம்
செய்யனும்”
“பஞ்ச் டயலாக் முக்கியம்”
“எங்க சிரிக்கனும்
எங்க கோபப்படனும்

எங்க கண்ணை கசக்கனும்
எங்க மூக்கை சொரியனும்

எல்லாமும் கச்சிதமா இருக்கனும்”…

கட்டளையிட்ட
மாதிரியே சரியா
எழுதிக் கொடுத்தாச்சு ..

பேசி
முடித்துவிட்டு
வந்தவர்
எழுதியவரை
கூப்பிட்டு
எல்லாம் சரி

“நான் பத்து நிமிடம் பேசுவதற்கு
தானே
ஸ்கிரிப்ட்
கேட்டேன்”

“நீ இருபது நிமிடத்துக்கு
எழுதித் தந்திருக்கே”

கோபப்பட்ட
தலைவரிடம்
பணிவோடு
சொன்னார்
அந்த பரிதாப
எழுத்தார்…

“நான் பத்துநிமிடம்
பேசத்தான்
உரையை தயாரித்துத் தந்தேன்”

“படிக்கும் போது
காற்றில் பேப்பர் பறந்து
கீழே விழுந்து விட்டால்
என்னாவது
என்று

பாதுகாப்புக்காக
உரை
எழுதுப்பட்ட
பக்கத்தை
ஒரு ஜெராக்ஸ்
எடுத்து
உடன் வைத்திருந்தேன்”..

“நீங்க அதை
கவனிக்காம
ஒரே உரையை
இரண்டு தடவை
வாசிச்சுப்புட்டீங்க

“அதனால தான்
பத்து நிமிஷம்
இருபதாகிப்
போச்சு…
நான் என்ன
பண்றது” ….

ஆம் இதுதான்

மூதறிஞரும்
பேரறிஞரும்
கலைஞரும்
முழங்கிய மேடைகளின்
இன்றைய
பரிதாப நிலை

என்ன நாஞ்

சொல்றது’’ என பதிவிட்டிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal