தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியை அண்ணாமலை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் இனி தமிழக அரசியல் களம் அண்ணாமலை வெர்சஸ் விஜய் என்று மாறும் சூழல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

பாஜகவில் இருந்து அதன் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விலகுவதாக அறிவித்தார். இதற்கான விலகல் கடிதத்தை பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்து அண்ணாமலை அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென டெல்லிக்குச் சென்றுள்ளதும், அங்கு அவர் கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துள்ளது தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பின் பின்னணியில் பல அதிரடியான தகவல்கள் உலா வருகின்றன.

இந்த டெல்லி சந்திப்பின் போது, அண்ணாமலை, பாஜகவிலிருந்து முழுமையாக விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை தேசிய தலைவரிடம் வழங்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.மத்திய அமைச்சரவையில் அவருக்கு பாஜக தலைமை ஒரு முக்கியப் பதவி தர முன்வந்ததாகக் தெரிகிறது. ஆனால், அந்த பெரிய வாய்ப்பை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

பாஜகவிலிருந்து வெளியேறிய பிறகு, அண்ணாமலை உடனடியாகப் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை. முதலில் ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்கி, அதன் மூலம் மக்களின் ஆதரவைத் திரட்டிய பிறகே, அதை ஒரு முழுநேர அரசியல் கட்சியாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லி புறப்படுவதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அண்ணாமலை “இரண்டு நாள் கெடுவும்” தமிழக அரசியலில் அடுத்த சில தினங்களில் ஒரு பெரிய திருப்பம் ஏற்படப் போவதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அதே நேரம் அரசியல் கட்சி தொடங்க போகிறீர்களா என்ற கேள்விக்கு அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் பாஜக கொடி பொருத்திய காரிலும் அவர் செல்லவில்லை என்பதாலும் அவர் பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

திருச்சியில் நேற்று பேசிய விஜய், ‘‘ஸ்டாலின் சாருக்கும் எனக்கும்தான் போட்டி’’ என்றார். உதயநிதி ஸ்டாலின் எனக்குப் போட்டியே இல்லை என்பதையும் சூசகமாகச் சொன்னார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை புதிய கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில், எதிர்கால தமிழகத்தில் விஜய் வெர்சஸ் அண்ணாமலை என அரசியல் களம் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal