நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ‘2026 தேர்தல் தீயசக்திக்கும், தூயசக்திக்கும் இடையேதான் போட்டி’ என தி.மு.க.வை கடுமையாக விமர்சித்த விஜய், ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தார்.

தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ், ‘வரும் காலம்’ எனும் தலைப்பில் தனது வலைதளப்பக்கத்தில் ‘துயசக்தி(-?)களுக்கும் வாழ்வளித்த பராசக்தியே’ என விஜய்யை விமர்சித்தும் ஸ்டாலினை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் புகழ்ந்தும் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்,
‘‘#வரும் #காலம்#
தூயசக்தி(?)
களுக்கும்
வாழ்வளித்த
பராசக்தியே…
விரலில் வைத்த
மை ஈரம் காய்வதற்குள்
நன்றி மறந்த
மக்களுக்கு
நன்றி சொன்ன
நல்லவரே…
நிகழ்கால
ஆசனம்
யாருக்கோ
என்றாலும்…
மக்களின்
மனங்களில்
நிறையாசனம்
என்றுமே…
முத்துவேல்
கருணாநிதி ஸ்டாலின்
என்கிற
உத்தமத்
தலைவா
உமக்கு
மட்டுமே…
ஆம் ..
உதிக்கும்
சூரியன்
நித்தமும் உரைக்கும்
கறையாக்கிக்
கொண்ட
கை களை
துடைக்க…
மீண்டும்
அந்த
கலைஞரின்
பிள்ளையை
கையோடு
கூட்டி
வாருங்கள்
என்று…
திருந்தி தீர்ப்பெழுதி
உன்னை
வருந்தி
அழைக்க
விரைந்து
வந்தே தீரும்
காலம்..!
மருது….’’ என பதிவிட்டிருக்கிறார்.
