சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த காளியம்மாள், மறைந்த முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்தார். இதற்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் ஆவேச பதிலடி கொடுத்திருக்கிறார்.

மருது அழகுராஜ் தனது வலைதளப் பதிவில்,
‘‘மக்கள் திலகம்
எம்ஜிஆரின்
முதல் படமான
மருதநாட்டு இளவரசி முதல்
நடிகர் திலகம்
சிவாஜியின்
முதல் படமான
பராசக்தி வரை..
உச்ச நட்சத்திரங்களின்
உதட்டசைவுக்கு
வார்த்தைகள்
கோர்த்திட
மாடர்ன் தியேட்டர்ஸ் தொடங்கி
மாபெரும்
தயாரிப்பு
நிறுவனங்கள்
எல்லாம்
அன்று..
காத்துக்கிடந்தது
அந்த
கலைஞரது
எழுத்து ஓவியத்திற்கு
தான்…
அப்படி
சொல்லாலும்
எழுத்தாலும்
உலகையே
சொக்க வைத்து
கட்டிப்போட்ட
அந்த சொல்லேர்
உழவருக்கு
அந்த
மகோன்னத
மகா கலைஞருக்கு…
இப்படியும்
ஒரு கதை புனைய
காளியம்மாளால்
முடியது என்றால்
இந்த காளியம்மாவுக்கு
எப்படி எல்லாம்
எதிர்காலம்
கதை எழுத
காத்திருக்கிறதோ
அந்தோ
பரிதாபம்…
ஆனாலும்…
காளியம்மா
வீட்டு உலை கொதிக்கவும்
இன்று
கலைஞரே
உதவுகிறார்
என
“கூலி”யம்மா
கூவுவதை
கடந்து போவோம்…
வசவாளர்
வாழ்க என்ற
நம்
அண்ணாவின்
வழியில்…
