இயற்கை பேரிடர்கள், மழை, வெள்ளம் போன்றவற்றை வானிலை மையம் சொல்வதற்கு முன்பே பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என ஆற்காடு பஞ்சாங்கம் கணித்திருக்கிறது.

2026 சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ பெரும் இளைஞர் படையுடன் களத்தில் இறங்குவதால் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக கணிக்க முடியவில்லை. காரணம் விஜய் யாருடைய வாக்கைப் பிரித்து யாரை வெற்றி பெற வைக்கப்போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தளவில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இரண்டுமுறை ஆட்சியைப் பிடித்துள்ளனர். கலைஞர் இருக்கும்வரை தி.மு.க. இரண்டாவது முறை ஆட்சியைப் பிடிக்கவில்லை. மாறி மாறி தான் (தி.மு.க., அ.தி.மு.க.) ஆட்சியமைந்திருக்கிறது.

இந்த நிலையில்தான், பராபவ ஆண்டு ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

அதில், இந்த ஆண்டு நடைபெற உள்ள பல்வேறு விஷயங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் அரசியல் குறித்து ஒரு குறிப்பு உள்ளது. தற்போது, தமிழகத்தில் பல்வேறு கருத்துகணிப்புகள், ஒரு கட்சி பெரும்பான்மை பெற்று ஜெயிக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், பஞ்சாங்கத்தில், ‘உலகலாவிய அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும்.

‘‘தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளில், எதிர்பார்த்த வெற்றி யாருக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சி அமையும்’’ என கூறப்பட்டுள்ளது. அதாவது,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் மக்கள் எதிர்பார்த்த முழுமையான வெற்றி கிடைக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சியின் தனிப்பெரும் ஆட்சி முடிவுக்கு வந்து, பல்வேறு கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் ‘கூட்டணி ஆட்சி’ அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக பஞ்சாங்கம் கூறுகிறது. இந்தக் கணிப்பு அரசியல் வட்டாரங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தொண்டர்களிடையே இது கலக்கத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ள இந்தக் கணிப்புகள் ஜெயிக்குமா அல்லது பொய்யாகுமா என்ற கேள்விக்கான விடையைப் பெற, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை நாம் காத்திருப்போம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal