திருச்சி பிரச்சாரத்தின் போது விஜய் வாகனம் சென்ற இடத்தில் இளம்பெண் கணவருடன் சென்ற இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியபோது, உடனடியாக விஜய் சாலையில் இறங்கியதுதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த தவெக தலைவர் விஜய் ஓபன் வேனில் வராமல் வாகனத்துக்குள் இருந்தபடியே மக்களை சந்தித்தார். மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் செய்த நிலையில், தற்போது திருச்சிக்கு வந்த விஜய் வேனில் இருந்து வெளியே எட்டிப் பார்த்தபடியே வந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
சொகுசு வண்டியிலேயே விஜய் செல்கிறார் என்றும் மக்களுடன் மக்களாக அவர் இணையவில்லை என்றும் அவருக்கு எதிரான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், விஜய் திடீரென வண்டியை விட்டு ரோட்டில் இறங்கியது ஏன் என்கிற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான விவரங்களும் வெளியாகி உள்ளன.
பெரம்பூர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் தான் அடுத்து போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்துள்ளார். விஜய் வரும் போது வாகனம் ஒன்று உரசியல் கணவருடன் பெண் வண்டியில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறங்கிய விஜய், ‘‘என்ன ஆனது? எல்லாம் ஓகேவா?’’ என்பதை அக்கறையுடன் விசாரிக்கவே விஜய் தனது வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன
வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் விஜய் ரோடு ஷோ எல்லாம் செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், விஜய் ரோடு ஷோ செய்து வருகிறார். விஜய்யை காண சாலை முழுவதும் மக்கள் காத்திருப்பதை பார்த்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீடியாக்களில் வெளியாகும் வீடியோக்களையும் தங்கள் மொபைல் போனில் எடுக்கும் வீடியோக்களையும் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.
