கரூர் நெரிசலில் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், டெல்லியில் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரம் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அவரிடம் சில ஆதாரங்களை காட்டி துருவி துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் 3 முறை டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த துயர சம்பவத்துக்கு திமுக மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களே காரணம் என தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும், சம்பவம் நடந்த அன்று இரவே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்ததால், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், மார்ச் 17-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.
அதன்படி செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். நேற்று காலை 11 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் கரூர் சம்பவம் குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் மீதே குற்றச்சாட்டை முன்வைத்து செந்தில் பாலாஜி பதில்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் 6 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகள் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தனர். மாலை 5 மணி அளவில் விசாரணை நிறைவடைந்தது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், ‘‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த சில மணித்துளிகளில் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்தது, வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் செந்தில்பாலாஜி அறக்கட்டளை வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. கூட்டத்திற்குள் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் புகுந்து பிரச்னையை எழுப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை தவெக நிர்வாகிகள் முன்வைத்தது குறித்தும் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.
தவெக நிர்வாகிகள் ஒப்படைத்த வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்து செந்தில்பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். குறிப்பாக, சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்தது எப்படி? அவருக்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடந்திருக்கிறது.

முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேரணி மற்றும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக செந்தில் பாலாஜி அறிந்த தகவல்களை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக செந்தில் பாலாஜி காலையில் வந்த போது அவர் சென்ற கார் சிபிஐ அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பேரணி மற்றும் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக செந்தில் பாலாஜி அறிந்த தகவல்களை வாக்குமூலமாக சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுவதற்காக செந்தில் பாலாஜி காலையில் வந்த போது அவர் சென்ற கார் சிபிஐ அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால், மாலையில் அவரது வாகனம் சிபிஐ அலுவலகத்திற்குள் எடுத்து செல்லப்பட்டு, பின்னர் உள்ளே அமர்ந்தவாறு செந்தில் பாலாஜி சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். 6 மணி நேரம் செந்தில் பாலாஜியிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு சம்மன் வழங்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது” என்றனர்.
