த.வெ.க. தலைவர் விஜய் நாளை விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தும் நிலையில், சென்னையில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விஜய் ஏற்கனவே இரண்டு முறை சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விஜய் நாளை நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் டெல்லி செல்வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. தவெக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் விஜய் நாளை நேர்காணல் நடத்தவிருந்த நிலையில், நாளை டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், நாளை திட்டமிட்டபடி விஜய் நேர்காணல் நடத்தவுள்ளதாகவும், கரூர் துயர சிபிஐ விசாரணைக்கு நாளை டெல்லி செல்வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தவெக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் நாளை விஜய் நேர்காணல் நடத்தவுள்ளதாகவும், முதல்கட்டமாக 25 பேரிடம் விஜய் நேர்காணல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் வேகமாக இயங்கிவரும் சூழலில், மறுப்பக்கம் யார் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என்பது குறித்தான தகவல்களும் வெளியாகிவருகிறது.
அந்த வகையில் தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், திமுக கைவசம் இருக்கும் இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் கவனம் பெற்றுள்ளது.
அதன்படி விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜும், பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகரும் எம்.எல்.ஏ.வாக இருந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
