கோபிசெட்டிபாளையம் அருகே, தமிழக வெற்றி கழக ஒருங்கிணைப்பாளர் குறித்து அவதூறாகப் பேசிய அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளரை, தவெக தொண்டர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிழக்கு ஒன்றியப் பகுதிகளான புதுக்கரைப்புதூர், பாரியூர் இந்திரா நகர், முத்துக்காளிமடை, குள்ளம்பாளையம் மற்றும் வேட்டைக்காரன் கோவில் உள்ளிட்ட இடங்களில் அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இக்கூட்டங்களில் அதிமுக தலைமைக்கழகப் பேச்சாளர் தாராபுரம் முத்து மணிவேல் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக்காக ஒருங்கிணைப்பாளரின் சொந்த ஊரான குள்ளம்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்ற கூட்டத்தில் முத்து மணிவேல், தமிழக வெற்றி கழகத்தின் ஒருங்கிணைப்பாளர். செங்கோட்டையன் குறித்து தரைக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சால் அதிருப்தியடைந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அடுத்ததாக வேட்டைக்காரன் கோவில் பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த அதிமுகவினரை வழிமறித்தனர்.

தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, அதிமுக பேச்சாளர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரைக்குறைவாக பேசியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமென தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவினனிடம் வாக்குவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து ஒரு வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிவில் வெளியே வந்த தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ‘‘தமிழக வெற்றிக்கழக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை தரை குறைவாக பேசியவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் இந்த பிரச்சனையை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்’’ என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்

அ.தி.மு.க.வினரைக் கண்டித்து த.வெ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal