த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் திரிஷா குறித்து பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரின் பேசியது பற்றி எரிந்து வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாக மருது அழகுராஜ் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்

அதாவது, ‘ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தல் முடிஞ்சதும் ஆடையில்லாமல் தெருவில் செல்லக்கூடிய நிலைவரும்’ என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.

இந்த நிலையில்தான், ‘‘குத்துக்கோல்’’ எனும் தலைப்பில் தி.மு.க.வின் செய்தி தொடர்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்,

‘‘வெகுகாலமாய்
மூளையே இல்லாது
வீதியில் அலையும்

புத்தியற்ற குத்துக்கோல்
ஒரு அஃறிணை…

அதனிடமிருந்து
உயர்திணை
பண்பினை ஒருபோதும்
காண முடியாது!

இதற்கு அதன்
தரங்கெட்ட பேச்சுகளே
தரச்சான்று..!’’ என பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையேதான், முதல்வர் கொடுத்த ரூ.5 ஆயிரம் தொகை குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி, ‘‘பணவீக்கத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் ரூ.5000 என்பது ஒரு பெரிய தொகையே அல்ல. ஒரு பாலியல் தொழிலாளி ஒரு நாளில் இதைவிட அதிகமாக சம்பாதிக்கிறார்’’ என பதிவிட்டிருக்கிறார்..

ஆடிட்டர் குருமூர்த்தி…

அடுத்து சட்டமன்றத்தில் பேசியதற்கும் பதிலடி கொடுத்த மருது அழகுராஜ், ‘‘இழிவு செய்தல்’’ எனும் தலைப்பில்,

‘காது குத்தல் ஒருவகை
பாரம்பரிய சிகிச்சை
மதங்கள் கடந்து
பின்பற்றப்படும்
இந்துக்களின்
நம்பிக்கை சடங்கு!

இதனை எடப்பாடியின்
மேதாவி கும்பல்
இழிவு படுத்துகிறது’’
என பதிவிட்டிருக்கிறார்.

தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தளவில் தி.மு.க.வில் உள்ள ஒரு சில பேச்சாளர்கள் இப்படி தரங்கெட்டு விமர்சிக்கவில்லையா? என அ.தி.மு.க. தரப்பில் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், அவர்கள் எல்லாம் முதல்வராக இருந்ததில்லையே? ஒரு முதல்வர் இப்படி தரங்கெட்டு பேசலாமா? என்ற கேள்வியையும் மருது அழகுராஜ் எழுப்பியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal