என்.டி.ஏ. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க. இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அருள் எம்.எல்.ஏ.

பா.ம.க.வில் தந்தை & மகன் மோதல் முற்றிய நிலையில், பா.ம.க. இரண்டாக உடைந்தது. இந்த நிலையில்தான் டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இணைவார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.வான அருள், இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

விரைவில் டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க.வும் அ.தி.மு.க. கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் கூட்ட மேடையில் அய்யா டாக்டர் ராமதாஸ் இருப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal