‘பூனைக்கு பயந்து புலியிடம் அடைக்கலம் தேடிய கதை’ யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றாக பொறுத்தமாக இருக்கிறது. காரணம் சி.பி.ஐ.யை தேடிப் போனது விஜய்யின் போர்ப்படைத் தளபதி ஆதவ் அர்ஜுனாதான்!
கரூர் துயர சம்பவம் தொடர்பாக 2வது நாள் விசாரணைக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விஜய் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜர் ஆனர். அவரிடம் ஏற்கனவே சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் இரண்டாம் நாள் விசாரணையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ஆகியோர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் சரமாரியாக சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கரூர் துயரச் சம்பவத்திற்கு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் பரப்புரைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஒரு காரணமாக சொன்னாலும், விஜய் தாமதமாக வந்தது ஏன்? காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்திற்கு போகவேண்டாம் என்று சொல்லியும் அங்கே போனது ஏன்? என்பது உள்பட சரமாரியான கேள்விகளை கேட்டு வருகின்றன.
குறிப்பாக, கரூர் துயரச் சம்பவத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பொறுப்பு என்றாலும், அந்த நிகழ்ச்சிக்கு தலைமை விஜய், அவரை பார்க்க வந்துதான் பரிதாபமாக 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவரது பெயரை தமிழக காவல்துறை வழக்குப் பதிவின் போது சேர்க்கப்படாதது ஏன்? என்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர்.
முதற்கட்ட குற்றப்பத்திரிகையில் விஜய்யின் பெயரைச் சேர்த்து நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கையை சமர்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கரூர் துயரச் சம்பவத்தில் இருந்து விஜய் அவ்வளவு எளிதில் ‘ஏதாவது காரணத்தைச்’ சொல்லி தப்பிக்க முடியாது என்கிறார்கள்.
கரூர் துயச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ‘இன்ச் பை இன்ச்’சாக கேள்விகளை கேட்பதுதான் டெல்லி குளிரிலும் விஜய்யை வியர்க்க வைக்கிறது என்கிறார்கள் அதிகாரிகள் வட்டாரத்தில்!
2026 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் விஜய் வழக்கு விசாரணைகளை சந்திப்பதற்கே நேரம் சரியாக இருக்கும், தேர்தல் பிரச்சாரங்களை எப்படி மேற்கொள்ளப் போகிறார் என கேள்விகளை எழுப்பு வருகின்றனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள்!
