தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும் என்றும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று இன்று மாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் 7 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் விடப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். இதேபோல் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
