கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று பிற்பகல் கோவை வந்த பிரதமர், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றார். அப்போது வழிநெடுக பாஜக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கொடிசியா மைதானத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாய அரங்குகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது,

‘‘தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்க மேடைக்கு வந்த போது விவசாயிகள் தங்களின் தோளில் இருந்த துண்டை எடுத்து சுற்றியதை பார்த்த போது, பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ என்ற எண்ணம் தோன்றியது’’ என மோடி பேசியபோது அரங்கமே அதிர்ந்தது.

மேலும் பேசிய மோடி“பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதியின் இந்த தவணை இன்று இந்த மேடையில் இருந்து நாடு முழுவதற்கும் ரூ. 18,000 கோடி விடுவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டின் விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; “பாண்டியன் உரை சிறப்பாக இருந்தது. உரை தமிழில் இருந்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழை சிறு வயதில் கற்று இருக்கலாமே என தோன்றியது. பாண்டியனின் உணர்வுபூர்வமான உரையாக பிடித்து இருந்தது. பாண்டியன் உரையை ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழியாக்கம் செய்ய ஆளுநரிடம் சொல்லி இருக்கிறேன்.

ஜவுளி துறையால் பெருமை கொண்டுள்ள கோவை தற்போது மேலும் ஒரு காரணத்திற்காக பெருமை கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருந்து நமக்கெல்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். இயற்கை விவசாயம் என் இதயத்திற்கு நெருக்கமானது.

மேடைக்கு வரும் முன் அரங்குகளை பார்த்தேன். இயந்திரவியலில் இருந்து ஒருவர், இஸ்ரோவில் இருந்து ஒருவர் என விவசாயத்திற்கு வந்துள்ளனர். நான் இங்கு வரவில்லை என்றால் பல விஷயங்கள் தெரியாமல் போயிருப்பேன். இங்கு வேளாண் துறையினர், ஸ்டார்ட் அப் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர்.

விவசாயிகள் கடன் அட்டை மூலம் மட்டுமே இந்த ஆண்டில் மட்டும், ரூ. 10,000 கோடி அளவிலான நன்மைகள் பெற்றிருக்கிறார்கள். 7 ஆண்டுகளுக்கு முன்பாக கால்நடை பராமரிப்பாளர்களுக்கும், மீன் வளர்ப்பாளர்களுக்கும் இந்த விவசாயி கடன் அட்டை பெற்று அவர்களும் நலன் பெற்றுவருகிறார்கள். உயிரி உரங்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைத்தபின் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வரும் நிதியின் இந்த தவணை இன்று இந்த மேடையில் இருந்து நாடு முழுவதற்கும் ரூ. 18,000 கோடி விடுவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டின் விவசாயிகளுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடவுள் முருகனுக்கு தேனும், தினைமாவையும் படைக்கின்றோம். நமது சிறந்த சிறுதானிய உணவு உலகம் முழுக்க உள்ள சந்தைகளில் சென்று சேர வேண்டும் என்பதே நமது அரசின் முயற்சி” என பேசியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal