சென்னையில் அதிகாலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கியதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐந்து இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது, அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வரும் நபரின் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கோயம்பேட்டில் வசித்து வரும் சவுதி என்பவரின் வீடும், நெற்குன்றத்தில் சிகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் என்பவரின் வீடும், சூளைமேடு மேதா நகரில் உள்ள ஒரு வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்ற புகார் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. சென்னையில் இன்று காலையிலேயே 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
