தென்காசிக்கு செல்லும் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலங்குளம் தொகுதியில் பிரம்மாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த வரவேற்பை உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த புதன் கிழழை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலங்குளம் வழியாக சென்றார். அப்போது தி.மு.க. சார்பில் மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் பல கிலோமீட்டர் தூரம் நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர். பேருந்து நிலையம் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், மலைக்கோயில் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வழிநெடுகிலும் வரவேற்பு கொடுத்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ஆலங்குளம் தொகுதியில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு குறித்து மூத்த உடன்பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், ஆலங்குளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கனிமொழி எம்.பி., பூங்கோதை ஆலடி அருணா, மாவட்டச் செயலாளர் மற்றும் ஒன்றியச் செயலாளர்கள் ஆகியோர் தலைமையிலான ஒருங்கிணைப்புதான் உற்சாக வரவேற்பிற்கு காரணம்.
முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் ஆக்டிவ் அரசியல் அங்குள்ள உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கட்சிப் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உடன் பிறப்புக்களுக்கும், சரி, அங்குள்ள பொதுமக்களுக்கு அவரது நலத்திட்டப் பணிகள் தொடர்கிறது. தகவல்கள் தெரிந்தவுடன் அடிமட்டத் தொண்டர்களின் நல்லது கெட்டதுகளில் பூங்கோதை ஆலடி அருணா உடனடியாக கலந்துகொள்கிறார். இந்த விஷயம் அங்குள்ள உடன்பிறப்புக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில்தான் ஆலங்குளம் தொகுதியில் உள்ள ஒன்றியச் செயலாளர்களின் ஒத்துழைப்போடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு கெடுத்து அசத்தியிருக்கிறார் பூங்கோதை ஆலடி அருணா. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உள்குத்து அரசியல் காரணமாக ஆலங்குளம் தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோல்வியுற்றது. ஆனால், முதல்வரின் வருகைக்குப் பிறகு ஆலங்குளம் தொகுதி மீண்டும் தி.மு.க.வின் கோட்டை என்பதை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்படும்’’ என்றனர்.
