த.வெ.க.வை தி.மு.க. முடக்க சதி செய்ததாக விஜய் தரப்பு குற்றஞ்சாட்டி வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை மற்றும் தனி நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு என அனைத்தையும் ஒருவாரத்தில் முடித்த ஆதவ் அர்ஜுனாவை த.வெ.க.வினர் வாழ்த்தி வருகின்றனர்.
கடந்த 2 வாரங்களாக பார்க்க வேண்டியவர்களை பார்த்து செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டீர்கள். அது நல்லதுதான். சிறப்பாக செயல்பட்டுள்ளீர்கள் என்று விஜய் பேசி உள்ளாராம். அதன்பின் சில நண்பர்களுக்கு போன் செய்த விஜய்.. ஆதவ் அர்ஜுனா சொன்னபடி செய்துவிட்டார் என்று பாராட்டி பேசி உள்ளாராம்.
‘‘நான் மோசமான சூழலில் இருந்த போது அருண் கைவிட்டுவிட்டார். புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார். ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்டன் ஆகிவிட்டார். ஆதவ் அர்ஜுனாதான் ஆதரவாக நின்றார். டெல்லி வரை சென்றார். அவரின் செயல் சிறப்பாக இருந்தது’’ என்று ஆதவ் அர்ஜுனாவை பாராட்டி பேசி உள்ளாராம்.
இந்த நிலையில்தான் சிவகங்கை மாட்டம் முழுவதும், ‘‘கரூர் துயர சம்பவத்தில் நீதியை பெற்றுத்தர நெடும் பயணம் மேற்கொண்டு உண்மைக்கான குரலை ஓங்கி ஒலிக்கச் செய்த எங்கள் தளபதியின் சாணக்கியரே… ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு நன்றி… நன்றி… நன்றி..!’’ என ஐ.மனோ மற்றும் மகேஷ் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது.
இந்த போஸ்டர்கள்தான் தற்போது தமிழகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
