‘சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகம்… பகட்டை நம்பி வாக்களித்துவிடாதீர்கள்… தங்கம் கூட தகரமாகிவிடும்…’ என முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பேசியிருப்பதுதான் ஆலங்குளம் தொகுதி உடன்பிறப்புக்களை சிந்திக்க வைத்திருக்கிறது.

நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஆவுடையப்பன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது நிர்வாகத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில்தான், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கீழப்பாவூர் பேரூராட்சி, கீழப்பாவூர் வடக்கு ஒன்றியம் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சி மற்றும் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, ‘‘ ஒரு பண்பட்ட அரசியல் கட்சியில் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி தனது கொள்கைகளில் மாறாமலும், எந்தவொறு சூழ்நிலையிலும் தடம் மாறமலு£ம் கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும் அன்பு அண்ணாச்சி (ஆவுடையப்பன்) அவர்களுக்கு வணக்கம்.
உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. திராவிடம் ஊற்று என்றால் கீழப்பாவூர்தான். இங்கிருந்துதான் தமிழகம் முழுவதும் பரவியது என்பதை நான் தைரியமாகச் பெருமையுடன் சொல்வேன்.
திராவிடம், பொதுவுடமை மற்றும் சமூகநீதியை பின்பற்றக்கூடிய ஒன்றியம் கீழப்பாவூர்தான் என்பதையும் பெருமையுடன் சொல்வேன். 2006ல் நாம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்தான் தமிழகத்தில் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தோம். அப்போது சட்டப்பேரவையை மிகவும் சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருந்தவர் அண்ணாச்சி ஆவுடையப்பன்தான். அதே போல் 2006, 2016ல் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றபோது, அப்போது அண்ணன்தான் மாவட்டச் செயலாராக இருந்தார். இரண்டுமுறை தி.மு.க.வின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரும் அண்ணன் ஆவுடையப்பன்தான். அதே போல் 2026லும் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க.வை வெற்றி பெறச் செய்யவேண்டியது நம் அனைவரின் கடமை என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால், கடந்த தேர்தலில் பகட்டைப் பார்த்து நிறையபேர் மயங்கிவிட்டீர்கள். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வரும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அதற்கு எடுத்துக்காட்டுதான் நம் கீழப்பாவூர். காரணம், தமிழ்நாட்டில் வேறு எங்கும் பொது எரி மேடை (தகன மேடை) இருக்காது. ஆனால், கீழப்பாவூரில் மட்டும்தான் இருக்கிறது என்பதை மனதில் நினைத்துக்கொள்ளவேண்டும். எனவே, சாதியைப் பார்த்து, மதத்தைப் பார்த்து வாக்களிக்கவேண்டாம்.
குறிப்பாக பகட்டைப் பார்த்து வாக்களிக்க வேண்டாம். இன்றைக்கு நான் வரும்போது தங்கம் விலை எவ்வளவு என்றார்கள்… நிறைய பேர் அந்த தங்கத்தைப் பார்த்து ஏமார்ந்துவிட்டீர்கள். இன்றைக்கு தங்கம் பித்தளையாக, ஈயமாகி, தகரமாகிவிட்டது என்ற நிலையில் இருக்கிறது. எனவே, மீண்டும் ஒருமுறை ஆலங்குளம் தொகுதியில் தவறு நடந்துவிடக்கூடாது என பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைக்கு கட்டுப்பாடில்லாமல் புதிது புதிதாக கட்சிகள் முளைக்கின்றன. ஆனால், கீழப்பாவூர் ஒன்றியம் எவ்வளவு கட்டுப்பாட்டோடு இருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது’’ என்றார்.
அடுத்ததாக ஆலங்குளம் ஒன்றியத்தில் பேசிய பூங்கோதை ஆலடி அருணா, ‘‘எனக்கு இங்குவந்தவுடன் 2006ல் நடந்த தி.மு.க. செயற்குழு கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது. ஒன்றை எல்லோரும் நினைவு வைத்துக்கொள்ளுங்கள். 2006லும், 2016லும் ஆலங்குளம் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்ற போது மாவட்டச் செயலாளராக இருந்தவர் அன்பு அண்ணாச்சி ஆவுடையப்பன். அப்போது பூங்கோதை வெற்றி பெறவில்லை. திராவிட முன்ன«ற்றக்கழகம் வெற்றி பெற்றது என்பதை உள்வாங்கிக் கொண்டால், இனி எந்தவொருத் தேர்தலிலும் ஆலங்குளத்தில் தி.மு.க. தோல்வியைத் தழுவாது.
தலைவர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவருக்காக அல்லும் பகலும் அயராது உழைத்து ஆலங்குளம் தொகுதியை மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும் என நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நான் வெளிநாட்டில் படித்து, வெளி நாட்டில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், அங்கு கூட தமிழகத்தைப் போல் ‘இல்லம் தேடி மருத்துவம்’ இல்லை. எனவே, தமிழகத்திற்கு கிடைத்த முதல்வர் போன்று வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்கவில்லை.
நமது முதல்வரின் இமாலய தொடர் வெற்றிக்கு காரணம் மூன்று ஆங்கில எழுத்து P தொடங்கும் Patience (பொறுமை) Perserverance (விடா முயற்சி) Punctality (நேரம் தவறாமை). அண்ணமையில் ஒருவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் என்ன நடந்தது என நாடறியும் .
எனவே, பகட்டைப் பார்த்து வாக்களிக்காமல் மீண்டும் 2006, 2016 நிலைமையை ஆலங்குளத்தில் ஏற்படுத்தவேண்டிய நிலை அனைத்து உடன்பிறப்புக்களுக்கும் உண்டு’’ என்றார்.
