கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு குழு அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இதனை விசாரித்த ஐகோர்ட், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் இந்தக் குழுவில் கரூர் எஸ்பியை இணைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
