கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக தற்போது உயர்ந்துள்ளது. நேற்றிரவு வரை 40 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அரசு மருத்துவமனையில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கரூர் பிரச்​சார கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.2 லட்​ச​மும் நிவாரணம் வழங்​கப்​படு​வ​தாக தவெக தலை​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட நிலை​யில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடி​யாக சென்னை திரும்​பி​னார். பிரச்​சார கூட்​டத்​தில் திடீரென நெரிசல் ஏற்​பட்​டதற்​கான காரணம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பங்​களுக்கு செய்ய வேண்​டிய உதவி​கள், அவர்​களது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறு​வது ஆகியவை தொடர்​பாக கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை நேரில் சந்​தித்து ஆறு​தல்கூறு​வதற்​காக விஜய் மீண்​டும் கரூர் செல்ல அனு​மதி கேட்​டு, கட்​சித் தரப்​பில் காவல் துறை​யில் மனு கொடுக்​கப்பட உள்​ள​தாக​வும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal