வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் செந்தில் பாலாஜி. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினும் இவர் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்.

முதல்வரின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் செந்தில் பாலாஜியை குறிவைத்து நடிகர் விஜய் காய்நகர்த்தி வருவதாக தெரிகிறது. அதனால்தான் சேலத்தில் நடக்க இருந்த பிரச்சாரத்தை கரூருக்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்,’உங்க விஜய் நான் வரேன், மக்கள் சந்திப்பு பிரசாரம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கடந்த 13-ந்தேதி முதல் தொடங்கி உள்ளார்.

முதற்கட்ட சுற்றுப்பயணம் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் இருந்து தொடங்கியது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று அவர் பிரசாரம் செய்ய உள்ளார். இந்த பிரசாரம் பெரும்பாலும், சனிக்கிழமை நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.2-கட்ட பிரசாரத்தை நாகை, திருவாரூரில் விஜய் (செப் 20) மேற்கொண்டார்.

அடுத்ததாக வரும் 27ம் தேதி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த த.வெ.க தலைவர் விஜயின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதாவது, வரும் 27ம் தேதி சேலத்திற்கு பதில் கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் பிரச்சாரத்தில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சிக்கக் காத்திருப்பதோடு, சொந்தில் பாலாஜியின் கோட்டையில், த.வெ.க. கொடியைப் பறக்க விடப்போகிறாராம் விஜய்!

இதற்கிடையே, விஜய்க்கு இளைஞர்களின் கூட்டம் அதிகளவில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தை கரூரில் குறைத்துக் காட்ட வேண்டும் என்ற முயற்சியில் செந்தில் பாலாஜியும் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal