நடிகர் விஜய், ‘தி.மு.க.வுக்கும் த.வெ.க.வுக்கும் தான் போட்டி’ என்கிறார். ஆனால், தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும்தான் போட்டி என முதல்வர் சொல்லாமல் சொல்கிறார்! தவிர, விஜய் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்தும் தி.மு.க. கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

தமிழ்நாடு வெற்றி கழக நிறுவனரும், நடிகருமான விஜய்யின் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஸ்டாலினை எப்படியாவது பேச வைக்க வேண்டும்.. ஸ்டாலின் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக அட்டாக் மோடில் பேசி வருகிறார். ஆனால் இதுவரை ஸ்டாலின் விஜய் பெயரை கூட கூறவில்லை.

விஜய் தனது மாநிலம் தழுவிய அரசியல் சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரடியாக தாக்கி பேசி உள்ளார். முதல்வர் ஸ்டாலினை எப்படியாவது விவாதத்திற்குள் இழுக்க வேண்டும் என்று விஜய் தொடர்ந்து தாக்கி பேசி வருகிறார்.

முதல்வர் ஸ்டாலினின் பயணங்கள் ‘‘மாநிலத்திற்கு முதலீடு கொண்டுவரவா அல்லது வெளிநாட்டில் தனிப்பட்ட முதலீடுகளைப் பாதுகாப்பதற்காவா?’’ என்று அவர் கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்திற்கான பிரச்சினைகள் தொடர்பாக பாஜக மற்றும் திமுகவை விமர்சித்த விஜய், பாஜக ‘‘பிரித்தாளும் அரசியல்’’ செய்வதாகக் கூறினார். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இந்தியர்கள் என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டும் தமிழ்நாட்டு மீனவர்கள் என்றும் தனித்துக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மீனவர் பிரச்சினைகள் குறித்து ஸ்டாலின் கடிதங்கள் மட்டுமே எழுதுகிறார் என்றும், உறுதியான நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

திருவாரூரில் ஓடாமல் இருந்த தேரினை ஓட வைத்தது நாங்கள் என்று மார்தட்டி கொள்வார்கள்.. ஆனால் இன்று அவரின் மகன் தமிழ்நாடு என்கிற தேரினை ஓடவிடாமல் நான்கு திசைகளிலும் முட்டுக் கட்டை போடுகிறார்.. திருவாரூர் மாவட்டம் தான் அவங்களுடைய சொந்த மாவட்டம் என பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் இங்கு திருவாரூர் கருவாடாக காய்கிறது. அதனை கண்டுகொள்ளவில்லை. தந்தை பெயரில் பேனா சிலை வைக்கிறீர்கள்.. உங்கள் தந்தையின் பெயரை பல்வேறு திட்டங்களுக்கும் வைக்கிறீர்கள்..

ஆனால் சொந்த மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதி கூட சரியாக இல்லை.. நாகை மாவட்டத்தை போலவே திருவாரூர் மாவட்டத்திலும் அதிகளவிலான குடிசைகள் இருக்கின்றன. தவெக ஆட்சியில் அடிப்படை வசதிகளில் எந்த சமரசமும் இருக்காது. குடும்ப ஆட்சி இல்லாத, ஊழல் இல்லாத தமிழ்நாடு என்பதே இலக்கு.. எங்கு பார்த்தாலும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது என்கிறார்கள்.. அப்படியா என்று அங்கிருந்தவர்களிடம் விஜய் கேட்க, அதற்கு தொண்டர்கள் இல்லை.. இல்லை.. இல்லை என்று பதில் அளித்தனர்.

ஆனால் விஜயின் விமர்சனங்களுக்கு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இதுவரை பதில் அளிக்கவில்லை. ஸ்டாலினை எப்படியாவது பேச வைக்க வேண்டும்.. ஸ்டாலின் தனக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக அட்டாக் மோடில் பேசி வருகிறார். ஆனால் இதுவரை ஸ்டாலின் விஜய் பெயரை கூட கூறவில்லை.

தி.மு.க.வின் முப்பெரும் விழா கரூரில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவர் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார். ஆனால் விஜயை பற்றி ஸ்டாலின் பேசவே இல்லை.

கொள்கைகள் என்றால் என்னவென்று அறியாத எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தி.மு.க. ஆட்சியின் கடந்த நான்காண்டுகால சாதனைகளையும், நலத்திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

திருவாரூரில் விஜய் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அவரது பெயரைக் கூட உச்சரிக்காமல் பதில் அளித்தார் பூண்டி கலைவான். தி.மு.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் விஜய்யின் பெயரைக் கூட உச்சரிக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal