தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேர்தல் கணக்கைத் தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, கோகுலம் மக்கள் கட்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த கட்சிகள் எல்லாம் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, அந்தக் கட்சி சின்னங்களில் போட்டியிட்டது குறிப்பிடத் தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal