2026 சட்டமன்றத் தேர்தலில் ‘மதுரை மேற்கு தொகுதியில் உதயசூரியன் உறுதியாக உதிக்கும்’ என முதல்வர் ஸ்டாலினிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் அமைச்சர் பி.மூர்த்தி!

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருக்கிறது. தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை இதனை தி.மு.க.வின் கோட்டையாக மாற்றிக் காட்டுகிறேன் என முதல்வரிடம் உறுதி கொடுத்திருக்கிறாராம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது அ.தி.மு.க.வினரே அதிருப்தியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அமைச்சர் மூர்த்தியின் தீவிர விசுவாசியான பெத்தானியாபுரம் பகுதி கழக செயலாளர் மதி வெங்கடேஷ் மதுரை மாவட்டம் முழுவதும், ‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்…!’, ‘களம் நமதே… வருங்காலமும் நமதே…’ என போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறாராம். தவிர, மதுரை மேற்குத் தொகுதியில் இந்த முறை தி.மு.க. வென்றாக வேண்டும் என தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறாராம் மதி வெங்கடேஷ்!

முதல்வரிடம் அமைச்சர் மூர்த்தி கொடுத்த உறுதி நிச்சியம் உறுதியாகிவிடும் என்கிறார்கள் மதுரை மேற்கு தொகுதி உடன் பிறப்புக்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal