தனது சொந்த மாவட்டமான நாமக்கல் மாவட்டத்தையே ஒருங்கிணைக்க முடியாமல் தடுமாறும் தங்கமணியால், திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வை எப்படி ஒருங்கிணைத்து வெற்றி பெற வைக்கப்போகிறார். இவரை பொறுப்பாளராக நியமித்திருக்கிறாரே எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுக-வை ஒருங்கிணைக்க தனக்கு 10 நாள் கெடு வைத்த செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை இபிஎஸ் பறித்திருக்கும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பி.தங்கமணிக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் அணி திரட்டி வருவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

நாமக்​கல் மாவட்​டத்​தில் செப்​டம்​பர் 19, 20, 21 ஆகிய 3 நாட்​கள் எடப்​பாடி பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொள்ள இருக்​கி​றார். இந்​தப் பயணம் தொடர்​பாக நாமக்​கல் மாவட்ட அதி​முக ஆலோ​சனைக் கூட்​டம் நாமக்​கல்​லில் உள்ள மாவட்ட தலைமை அலு​வல​கத்​தில் கடந்த 2-ம் தேதி நடை​பெற்​றது. முன்​னாள் அமைச்​சரும் மாவட்​டச் செய​லா​ள​ரு​மான பி.தங்​கமணி தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் முன்​னாள் அமைச்​சர் சரோஜா, பரமத்​திவேலூர் எம்​எல்​ஏ-​வான சேகர், முன்​னாள் எம்​எல்​ஏ-க்​கள் சரஸ்​வ​தி, கலா​வதி உள்​ளிட்ட பலரும் கலந்து கொண்ட நிலை​யில், நாமக்​கல் நகரச் செய​லா​ள​ரும், முன்​னாள் எம்​எல்​ஏ-வு​மான கே.பி.பி.​பாஸ்​கரும் அவரது ஆதர​வாளர்​களும் கலந்​து​கொள்​ளாமல் புறக்​கணித்​தனர்.

அண்​மை​யில் அதி​முக-​வில் இணைந்த சேந்​தமங்​கலம் அதி​முக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சி.சந்​திரசேகரனும் இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ள​வில்​லை. இந்​தக் கூட்​டம் நடப்​பது குறித்து முறை​யாக தகவல் தெரிவிக்​காததே அவர்​கள் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​ளாததற்​குக் காரணம் என்று சொல்​லப்​படும் நிலை​யில், “ஆனால், அது​மட்​டுமே காரணம் கிடை​யாது.

நாமக்​கல் மாவட்ட அதி​முக-வை கிழக்​கு, மேற்கு என இரண்​டாகப் பிரிப்​பது உள்​ளிட்ட பல விஷ​யங்​கள் தொடர்​பாக பாஸ்​கருக்​கும், தங்​கமணிக்​கும் இடையே நீண்ட கால​மாக பனிப்​போர் நடக்​கிறது. அதனால், ஆட்​சி​யில் இருந்​த​போதே பாஸ்​கர் விவ​காரத்​தில் தங்​கமணி தலை​காட்​ட​மாட்​டார். கட்சி அறிவிக்​கும் போராட்​டங்​கள் எது​வாக இருந்​தா​லும் மாவட்​டத்​தின் பிற பகு​தி​களில் தான் நடக்​கும் மாவட்​டத் தலைநக​ரான நாமக்​கல்​லில் நடக்​காது. இத்​தனை நாளும் வெளி​யில் தெரி​யாமல் இருந்த இந்​தப் புகைச்​சல் இப்​போது வெளி​யில் தெரிய ஆரம்​பித்​திருக்​கிறது.

சேந்​தமங்​கலம் முன்​னாள் எம்​எல்​ஏ-​வான சந்​திரசேகரன் 2021-ல் இரண்​டாவது முறை​யாக வாய்ப்​புக் கேட்​டார். ஆனால், தங்​கமணி அவருக்கு சிபாரிசு செய்​ய​வில்​லை. அதனால் கட்​சி​யை​விட்டு விலகி சுயேச்​சை​யாக போட்​டி​யிட்ட சந்​திரசேகரன், அதி​முக-வை தோற்​கடித்​தார். மீண்​டும் இப்​போது அதி​முக-வுக்கு திரும்​பி​யுள்ள சந்​திரசேகரனுக்கு தங்​கமணி மீதான தனது பழைய கோபம் தீர​வில்​லை. அதனால் அவரும் ஆலோ​சனைக் கூட்​டத்​தைப் புறக்​கணித்​திருக்​கி​றார்” என்​ற​னர்.

எதிர்க்​கட்சி வரிசை​யில் இருந்து கொண்டு இப்​படி ஆளாளுக்கு குறுநில மன்​னர்​களைப் போல் அரசாட்சி நடத்​திக் கொண்​டிருந்​தால் எடப்​பாடி​யார் என்​றைக்கு மக்​களை காப்​பது தமிழகத்தை மீட்​பது?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal