தமிழகம் முழுவதும் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில்¢ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால், இந்த கூட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆளும் தி.மு.க. ஆம்புலன்ஸை கூட்டத்திற்குள்ளே நுழையவிடுவதாக எடப்பாடி பழனிசாமியே குற்றஞசாட்டியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் அமைதி பாலு…

இந்த நி¬யில்தான் நேற்று மாலை திருச்சி மாவட்டம் துறையூருக்கு எடப்பாடி பழனிசாமி இரவு 7.30 மணிக்கு வந்தார். மாலை 6 மணி முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். இந்த நிலையில்தான் அந்த கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் ஒன்று நுழைந்தது. இதனால் ஆவேசமடைந்த துறையூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அமைதி பாலு, ஆம்புலன் ஓட்டுநரை எச்சரித்து திரும்பிச் செல்லுமாறு ஆவேசமாக கூறினார். அங்கிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும் ஆம்புலன் ஓட்டுநர் மீது ஆவேசமடைந்தனர். ஆனால் அவரை யாருக்கும் தாக்கவில்லை. ஆம்புலன்ஸை பின்னோக்கிச் செல்லுமாறு ஆவேசமாக கூறினார்கள்.

விபத்தில் காயமடைந்தவரை மீட்க வந்த ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவரை அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் தாக்கியதாக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், உண்மையில் என்ன நடந்தது என விசாரணையில் இறங்கினோம்.

‘‘சார், அ.தி.மு.க.வின் பொதுக்கூட்டங்களில் ஏராளமான அதிமுகவினரும், மக்களும் திரள்வதால் ஆளும் தி.மு.க.வினர் இதுபோன்ற கீழ்த்தரமான ‘ஆம்புலன்ஸ் அரசியல்’ செய்கின்றனர். துறையூருக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து, ‘துறையூரில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’ என்று கூறினார்.

அந்தளவிற்கு எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்திற்கு கூட்டம் கூடியிருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் அதிதீவிரமாக களத்தில் இறங்கி வேலை பார்த்தவர் துறையூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அமைதி பாலு! இந்த நிலையில்தான், வெறும் ஆம்புலன்ஸ் வண்டி கூட்டத்திற்குள் நுழைந்ததைப் பார்த்து ஆவேசமான அமைதி பாலு ஆம்புலன்ஸை திரும்பிச் செல்லுமாறு ஆவேசமாக கூறினார்.

துறையூர் அரசு மருத்துவமனையில் இருக்கும் ஆம்புலன்ஸ் டிரைவரோ, ‘கூட்டத்தில் ஒருவர் மயக்கம் போட்டுவிட்டதாக தகவல் வந்தது. அதற்காக சென்றேன்! என்னை தடுத்து நிறுத்திவிட்டார்கள். எனக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது’ என்கிறார். பத்திரிகை செய்திகளிலோ, ‘விபத்தில் சிக்கியவரை மீட்க ஆம்புலன்ஸ் சென்றது’ என செய்திகள் வருகிறது. அப்படி யாரும் விபத்தில் சிக்கவில்லை என்கிறார்கள் அப்பகுதியினர். அப்படியே ஒருவர் மயக்கம் போட்டிருந்தாலும் முசிறி பிரிவு ரோடு பைபாஸ் வழியாக, சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்றிருக்கலாம். எனவே, இனியாவது தி.மு.க. ஆம்புலன்ஸ் அரசியலை நிறுத்திக்கொள்ளவேண்டும்’’ என்றனர்.

நமக்கு நெருக்கமான உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் பேசினோம், ‘‘பாஸு…. அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் நுழையும் என்பது எங்களுக்கு காலையிலேயே தெரியும்’’ என்றார்.

நல்லா இருக்குதுப்பா உங்க ‘ஆம்புலன்ஸ் அரசியல்’!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal