டெல்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கு அனைத்து மாநில எம்.பி.,க்களும் டில்லியில் தங்கி உள்ளனர். அவர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று தனது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து விவாதம் நேரத்தில் முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 04) டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, மயிலாடுதுறை தொகுதி காங் எம்பி சுதாவிடம் செயின் ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர்.
இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். டில்லியில் எம்.பி.,யிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.