வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தி.மு.க. வகுத்து செயல்படுத்தி வருகிறது. ‘தமிழகத்தை மீட்போம்… மக்களைக் காப்போம்’ என அ.தி.மு.க. களத்தில் இறங்கி அடித்து விளையாடுகிறது.

‘அடுத்த முதல்வர் நான்தான்’ என அடித்துச் சொல்லும் விஜய்யோ மதுரையில் மாநாட்டை அறிவித்த கையோது, தி.மு.க., அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் ‘மாஜி’க்களிடம் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

அதே சமயம், கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் மூலமும், தனக்கு நெருக்கமான சிலர் மூலமும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் காங்கிரஸ் கட்சிக்கு தூதுவிட்டு.வருகிறாராம். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. இது அரசியல் நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மூத்த தலைவர்கள், கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கூட்டணி மாற்றத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். “கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் வளர வேண்டுமென்றால், திமுக கூட்டணியிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழக வெற்றிக் கழகம் அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தால், ஆட்சியில் காங்கிரஸுக்குப் பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால், தமிழக வெற்றிக் கழகம் அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைப்பது அவசியம். அப்போதுதான் நமக்கு பதவி கிடைக்கும். அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும்” என்று அவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

விஜயின் தூது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, விஜய், காங்கிரஸ் கட்சிக்கு தூது அனுப்பியதாக வெளியான தகவல்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ராகுல் காந்தியை சந்திப்பதற்கான நேரம் கேட்டுள்ளார் விஜய்.

ராகுல் காந்தியுடனான இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு அவர் முதலில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ராகுல் காந்தி இதற்கு சம்மதித்தால், அது திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, இந்த சந்திப்புக்கு ராகுல் காந்தி ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விஜய், காங்கிரஸ் கட்சிக்கு தூது அனுப்புவதற்காக கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் அணுகியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச விஜய் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரின் கருத்துக்களும் வெளியாகியுள்ளன. ராகுல் காந்தியைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் த.வெ.க. கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியில் கேரள காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal