ரவி மோகனும், கெனிஷாவும் இலங்கை சென்றிருப்பது தொடர்பாக ‘நாயுடன்’ ஒப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி.
நடிகர் ரவி மோகன் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இடம்பிடித்து வருகிறார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக அவர் அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவாகரத்துக்கான காரணங்களும் பலதரப்பட்ட கருத்துக்களை கிளப்பின. இந்த நிலையில் ரவி மோகன் மற்றும் அவருடைய தோழி கெனிஷா இருவரும் இலங்கைக்கு சென்று இருக்கின்றனர். அதே நேரத்தில் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மறைமுகமான ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இது பலருடைய கவனத்தைபெற்று வருகிறது.
ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் தங்கள் உறவு குறித்து தனித்தனியாக பேட்டி அளித்தனர். ஆர்த்தி, ரவி மோகன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், ரவி மோகன் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரவி மோகன் தனியாக இலங்கைக்கு செல்லவில்லை, கெனிஷாவும் உடன் சென்றுள்ளார். இருவரும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கெனிஷா பல ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி மோகனின் ஆலோசனையின் பேரில் கெனிஷா இலங்கையில் இசை கச்சேரி நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். விரைவில் இருவரும் இணைந்து இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்த்தி ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஒருவர் தன்னுடைய சொந்த நாயை விட்டுவிட்டு இன்னொரு நாயை கொஞ்சும் போது சொந்த நாய் மனநிலை எப்படி இருக்கும் என்பது போன்று ஒரு ஸ்டோரி பகிர்ந்து இருக்கிறார். இது பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது. அதை பார்க்கும் பலரும் இது ரவி மோகனுக்கு பதிலடியா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
