வருகின்ற 2026 தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளும், புதுவரவான தமிழக வெற்றிக் கழகமும் தனித்தனியாக ரகசிய சர்வே எடுத்திருக்கிறார்களாம்.

தமிழக அரசியல் கட்சிகளின் ரகசிய சர்வே பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.

‘‘சார், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக பிரதான கட்சிகள் அனைத்தும், கள நிலவரங்கள் எப்படி இருக்கிறது? மக்களின் மன நிலை என்ன? என்பதை அறிய தனியார் ஏஜென்சிகள் மூலம் ரகசிய சர்வே எடுத்து பார்க்கின்றனர்.

இந்த சர்வே எடுப்பதன் நோக்கம், தங்கள் கட்சிக்கு மக்களின் ஆதரவு எப்படி இருக்கிறது? என்பதை அறிவது ஒரு புறம் இருந்தாலும், எதிர்க் கட்சிக்கு எந்தளவுக்கு ஆதவும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது தான் பிரதான கட்சிகளின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு காரணம், எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கும் இடங்களில் அதனை பலகீனமாக்கவும், தங்கள் கட்சி மார்ஜினில் வெற்றிவாய்ப்பை இழக்கும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும் தான்.

அந்த வகையில், திமுகவிற்காக, ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் ‘‘பென்’’ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் கொடுத்த தகவல்களின் சரியாக இல்லை. அதாவது, இன்னும் கொஞ்சம் களத்தில் இறங்கி அரசு வேலை பார்க்கவேண்டும். மக்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று கொடுத்திக்கிறது. அதன் அடிப்படையிதான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் அதிதீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தவிர, 4 மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் திட்டங்களை கொண்டு சேர்ப்பதிலும், அதனை விளம்பரப்படுத்துவதிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதேபோல, நடிகர் விஜய்யின் த.வெ.க.விற்காக அக்கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமென் அமைப்பு கவனித்து வருகிறது. தவிர தேர்தல் வியூக நிபுணர் ஜான் ஆரோக்கியசாமியும் ஒரு பக்கம் சர்வே எடுத்திருக்கிறார். மற்ற கட்சிகளுக்காவது எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியும். ஆனால், த.வெ.க.விற்கு எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது தெரியாது. ஆனாலும், ‘35 சதவீதம் இருக்கிறது… 45 சதவீதம் இருக்கிறது’ என ஆதவ் அர்ஜுனா போன்றவர்கள் கூறினாலும், விஜய்க்கு 8 முதல் 12 சதவீதம்தான் வாக்கு வங்கி இருக்கிறது என்பது ரகசிய சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது.

அதிமுகவை பொறுத்த வரை அக்கட்சியின் முடிவின் படி ஒரு தனியார் நிறுவனம் இந்த வேலையை பார்த்து வருகிறது. அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், தனியாக ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தமிழக தேர்தல் களத்தின் பல்ஸை அறிந்துகொள்கிறார். அந்த ஏஜென்சி மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் சர்வே எடுத்துப் பார்க்கிறார் மிதுன். தேர்தலில் வாக்குப்பதிவு நடக்கும் முதல்நாள் வரை மக்களின் மனநிலை மாறக்கூடியது. அதனால், கடைசி கட்டம் வரைக்கும் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது முக்கியம் என்பதாலேயே இந்த 3 மாதங்களுக்கு ஒருமுறை என்கிற கான்செப்டுக்குள் நுழைத்துள்ளார் அவர்.

ஆளும் கட்சிகள் மீதான அதிருப்தி, பா.ஜ.க.வுடனான கூட்டணியை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் ரகசி சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே சில தகவல்கள் கிடைத்திருக்கிறது.

தவிர, விஜய்க்கான செல்வாக்கு எப்படி இருக்கிறது? அவரை மக்கள் ஏற்கிறார்களா? என்கிற இரட்டைக் கேள்விகளுக்கு பதில் தேடி மட்டும் ஒரு சர்வே எடுக்கப்பட்டதாம். அந்த சர்வேயின் முடிவிகளில், சீமானின் நாம் தமிழர் கட்சியைப்போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்.

இதற்காக 10 முதல் 12 சதவீத வாக்குகள் மட்டுமே அவருக்கு கிடைக்கிறது. அதேசமயம், ஒரு இடத்தில் கூட வெற்றிக்கான வாய்ப்பு அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. வட தமிழகத்தில் விஜய் போட்டியிட்டால் அவர் மட்டும் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. அதுவும் விஜய்யை எதிர்த்து திமுகவும் அதிமுகவும் நேரடியாக வலிமையான வேட்பாளர்களை நிறுத்தினால் விஜய்யின் வெற்றிக் கேள்விக்குறியாகும். மாறாக, விஜய்யை எதித்து திமுகவிலும் அதிமுகவிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார்.

வட தமிழகத்தைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் போட்டியிட்டால் அவரது வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை. சுருக்கமாக, விஜய்யை எதிர்த்து திமுக-&அதிமுக வேட்பாளர்கள் களமிறங் கினால் விஜய் தோற்பார்; அதே சமயம் அவரை எதிர்த்து பிரதான கட்சிகளின் தோழமைக் கட்சிகள் போட்டியிட்டால் விஜய் ஜெயிப்பார். ஆக, த.வெ.க. தனித்துப் போட்டியிட்டால் விஜய்க்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு என்பதுக் கூட எட்டக்கனியாக இருக்கிறது. மற்றபடி தாக்கத்தை ஏற்படுத்தலாமே தவிர வெற்றி வாய்ப்பு என்பது மிகமிக குறைவு என்பதாகவே இருக்கிறது என்று அந்த சர்வே ரிசல்ட் சொல்கிறதாம்.

இந்த முடிவுகளின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி சில அரசியல் காய்களை அடுத்தடுத்து நகர்த்த இருக்கிறார்’’ என்றனர்.

ஆக மொத்தத்தில் முதல்வர் நாற்காலியை பிடிக்க மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேதான் மல்லுக்கட்டு நடக்கிறது. த.வெ.க.வால் அருகில் கூட நெருங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆதவ் அர்ஜுனா அவர்களின் கவனத்திற்கு….

‘தமிழக அரசியல் களத்தில் தரவுகளை நான் வைத்திருக்கிறேன்… விஜய் நிச்சயம் முதலமைச்சர் ஆவார்’ என்கிறார். ஒரு கட்சியின் ஆனிவேரே கிளைக்கழகம்தான்…. தமிழகம் முழுவதிலும் த.வெ.க.விற்கு கிளைச் செயலாளர்கள் இருக்கிறார்களா? என்பது ஆதவ் அர்ஜுனாவிற்கு தெரியுமா? ஒரு கட்சியின் ஆணிவேரே கிளைக் கழகம் என்பது தெரியாமல், இவரது அட்வைஸை கேட்டு ஒருவர் முதல்வர் நாற்காலியை பிடிப்பாரா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க.வைத் தவிர எந்தக் கட்சிக்கும் கிளைக்கழகம் என்பது முழுமையாக இல்லை என்பதுதான் நிஜம்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal