சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ஜூன் 2 ஆம் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வாக பாஜக தேர்தலுக்கு தயாராகும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் முக்கிய நகர்வாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 2 ஆம் வாரத்தில் ஜூன் 8ஆம் தேதி மதுரை ஒத்தக்கடையில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக மாநில நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்பாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அமைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர். இத்தகைய கூட்டம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கான முக்கிய கூட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய கூட்டத்தில் எதிர்கட்சியினரை எவ்வாறு எதிர்கொள்வது, பிரச்சார வியூகங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிகப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தற்போது பாஜக அடுத்தகட்ட நகர்வுகளுக்கு தயாராகி வருகிறது. இன்றைய தினம் அமித்ஷாவின் வருகை தொடர்பான அதிகார பூர்வமாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதற்கு பிறகாக அவரது உறுதியான பயண திட்டம் என்ன என்பது குறித்தான தகவல்களும் வெளியாக உள்ளது.