தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த 27 ஆய்வாளர்களை பணி இடம் மாற்றம் செய்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; குரோம்பேட்டை சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் ராஜ சேகரன், செம்மஞ்சேரி சட்டம் -ஒழுங்கு ஆய்வாளராகவும், கண்ணகி நகர் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் தயால், குரோம்பேட்டை சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளர் நடராஜ், கண்ணகி நகர் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், பல்லாவரம் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆய்வாளர் தினேஷ், பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆய்வாளராகவும், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து பழனிவேல் என்பவர் பல்லாவரம் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும்,

கூடுவாஞ்சேரி சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் முருகேசன், பள்ளிக்கரணை சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், பள்ளிக்கரணை சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் நெடுமாறன், கூடுவாஞ்சேரி சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், மணிமங்கலம் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளர் அசோகன், மத்திய குற்றப்பிரிவிற்கும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த டில்லி பாபு, மணிமங்கலம் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஆண்டனி சகாய பரத், சோமங்கலம் சட்டம் – ஒழுங்கு ஆய்வாளராகவும்,

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சித்ரா, செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த முத்துக்குமார், சோமங்கலம் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், சேலையூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கணேஷ் பாண்டியன், சிட்லபாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த சந்திரசேகரன், நுண்ணறிவு பிரிவுக்கும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ராஜா, பள்ளிக்கரணை குற்றப்பிரிவு ஆய்வாளராகவும்,

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த முருகானந்தம் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகா, மத்திய குற்றப்பிரிவுக்கும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த முருகன், மத்திய குற்றப்பிரிவுக்கும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த புஷ்பம், மத்திய குற்றப்பிரிவுக்கும், மத்திய குற்றப்பிரிவு பரணிதரன், கேளம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும்,

காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த வானதி, நுண்ணறிவு பிரிவுக்கும், தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மகுடீஸ்வரி, சேலையூர் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாலினி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஷீலா,

வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகவும், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கலைச்செல்வி, கானத்தூர் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், கேளம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் நாஞ்சில் குமார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், நுண்ணறிவு பிரிவு வசந்தி காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அச்செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது .

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal