‘அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்னையை திசைதிருப்புவதற்காக சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது’ என ஸ்டாலின் குற்றம்சாட்ட, ‘நாங்கள் இணைந்துவிட்டோம்’ என தி.மு.க.விற்கு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்திருக்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸும், செங்கோட்டையனும்!
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ,பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியது கவனம் பெற்றது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. சபாநாயகரை பதவி நீக்கக் கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார் ஆர்பி உதயகுமார்.
35க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்றதால் தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. இந்த விவாதத்தில், சபாநாயகர் பலமுறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். ‘‘நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். ‘போங்க போங்க’ என கிண்டல் செய்கிறார்’’ என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோடையன் ஆதரவு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனாலும் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. 2 முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்த நிலையில், டிவிஷன் முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இரண்டிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்திற்கு ஆதரவு – 63, எதிர்ப்பு – 154 வாக்குகள் பதிவானதால் தீர்மானம் தோல்வி அடைந்தது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியது கவனம் பெற்றது. ‘‘கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது? அந்தக் குழு சொன்னபடி நடவடிக்கை எடுத்தீர்களா?’’ எனக் கேள்வி கேட்ட எடப்பாடி பழனிசாமியை இடைமறித்து பதிலளிக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முயன்றபோது அவரை ஓ.பன்னீர்செல்வம் மறித்தார்.
உடனடியாக எழுந்து, ‘‘கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைப்பிடித்தீர்களா?’’என ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் ஒரு நிமிடம் அமைதி நிலவியது. என்ன இவங்க இரண்டு பேரும் ஒரே விஷயத்தில் ஒன்றாக நிலைப்பாடு எடுத்துள்ளார்கள் என்று பலரும் பார்த்தனர்.
இந்த வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு செங்கோடையன் ஆதரவு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இப்படி அதிமுகவின் எல்லா தரப்பும் பிரிந்தவர்களும் கூட ஒரே நிலைப்பாட்டை எடுத்தனர். அதிமுகவில் எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே சமீபகாலமாக உரசல் அதிகரித்திருந்தது. இருவருக்குமிடையே பேச்சுவார்த்தையும் நின்று போனது.
ஆனால், இந்த முறுகல் நிலை தேவையற்றது. தலைவர்களே இப்படி உள்கட்சி பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்படுகிற அளவுக்கு நடந்து கொள்ள வேண்டுமா? என்று எடப்பாடி மற்றும் செங்கோட்டையனிடம் சீனியர் கள் பேசியிருக்கிறார்கள்.
இதற்கிடையே இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பேசியது பார்த்து முதல்வர் ஸ்டாலினே வியந்து போய்விட்டார். இனியும் எடப்பாடி பழனிசாமி இறங்கிவராமல் வீம்பு பிடிக்கக்கூடாது என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.