அ.தி.மு.க.வின் சீனியரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று பா.ஜ.க.வை புகழ்ந்து பேசியிருப்பதுதான் அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

கோபிச்செட்டிப்பாளையம் சட்டசபை தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் செங்கோட்டையன்.

1977(சத்தியமங்கலம்), 1980 (கோபிச்செட்டிப்பாளையம்), 1984 (கோபிச்செட்டிப்பாளையம்), 1989 (கோபிச்செட்டிப்பாளையம்) , 1991 (கோபிச்செட்டிப்பாளையம்), 2006 (கோபிச்செட்டிப்பாளையம்) , 2011 (கோபிச்செட்டிப்பாளையம்), 2016 (கோபிச்செட்டிப்பாளையம்), 2021(கோபிச்செட்டிப்பாளையம்) தொகுதிகளில் வென்று எம்.எல்.ஏ.வானவர். எம்ஜிஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ், இபிஎஸ் என அதிமுகவின் வரலாற்றில் மொத்தம் 9 முறை எம்.எல்.ஏ.வாக வென்றவர் கே.ஏ.செங்கோட்டையன்.

2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில், சொத்துக் குவிப்பு வழக்கு செங்கோட்டையன் மீது இருந்ததால், தேர்தலில் போட்டியிடவில்லை. எம்ஜிஆரின் நம்பிக்கைக்குரிய இளைஞராக இருந்தார்; ஜெயலலிதாவின் ஆகப் பெரும் நம்பிக்கை பெற்ற தளபதியாகவும் அமைச்சராகவும் இருந்தவர் செங்கோட்டையன். இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குரு என்றும் அழைக்கப்படுகிறவர்தான் கே.ஏ.செங்கோட்டையன். குருவே சிஸ்யனை தீவிரமாக ஆதரித்துப் பேசிவந்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருக்கும்போது! ஆனால் இவர் திடீரென்று எடப்பாடியை எதிர்ப்பதற்கும், பா.ஜ.க.வை ஆதரிப்பதற்கும் காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் இவரது சொத்துக்கள் வருமானவரித்துறையின் வழக்கில் இருப்பதாகவும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றதில் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சொத்துக்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்பதற்காக செங்கோட்டையன் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal