சட்டசபையில் 2025&-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை இன்று (மார்ச் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. இன்று காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பின்னர் பேசிய அவர், ‘இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலம் தமிழகம். பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாமல் வழி நடத்துவோம்’ என்றார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:

  • 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஒலைச்சுவடிகள் பதிப்பாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக பாடநூல் கழகத்திற்கு ரூ.120 லட்சம் ஒதுக்கீடு
  • சென்னைக்கு அருகில் உலகத்தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும் என அறிவிப்பு
  • தமிழர்கள் அதிகம் வசிக்கும் டில்லி, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
  • மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
  • 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
  • ஆண்டுதோறும் உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.
  • தொல்லியல் ஆய்வுக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு உள்பட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal