சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து, 77 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, நிர்வாகிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்களுக்க்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், நலத்திட்ட உதவிகள், மருத்துவ உதவி, அன்னதானம் உள்ளிட்டவையும் துவக்கி வைக்கப்பட்டன.. இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என திரளானோர் கலந்துகொண்டனர்.
ஆனால், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில், இந்த முறை ராயப்பேட்டை ஆபீசுக்கு வரவில்லை.. மூத்த தலைவர், ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்காதது, அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே, அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து தலைவர்களில் ஒருவர் கே.ஏ.செங்கோட்டையன். இன்றைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் குருவே செங்கோட்டையன்தான். காலச் சக்கரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக, 2026- சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது செங்கோட்டையன் உள்ளிட்ட சீனியர்களின் விருப்பம். இதனை எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக தெரிவித்தும் அவர் ஏற்கவில்லை. இதனால் செங்கோட்டையன் அவ்வப்போது தமது அதிருப்தி குரல்களை வெளிப்படுத்தி வருகிறார்.
செங்கோட்டையனின் இந்த கலகக் குரல் பகிரங்கமாக வெளியானதைத் தொடர்ந்து முதலில் திமுக தரப்புதான் அவரை தொடர்பு கொண்டது. ஒரு கட்டத்தில் மேலிட சந்திப்புகள் கூட நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சந்திப்புகளில், தாம் திமுகவுக்கு வர இயலாது; அதிமுகவை ஒருங்கிணைக்கவே விரும்புகிறேன் என செங்கோட்டையன் தரப்பு கூறியதாம்.
திமுகவைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் செங்கோட்டையனை வளைக்கும் முயற்சிகளை மேற்கொண்டதாம். இதற்காக தமிழக வெற்றிக் கழகத்துக்கு தாவ தயாராக இருக்கிற- தாவிக் கொண்டே இருக்கிற பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாம்.
அப்போதும் செங்கோட்டையன் தரப்பு, ‘‘உங்கள் அரசியல் எதிர்காலம், நீங்கள் விஜய் கட்சியிலோ திமுகவிலோ சேருவது என்பது எல்லாம் உங்களது முடிவு. இதில் என்னையும் இழுத்துவிட வேண்டாம். கடைசி வரைக்கும் அதிமுககாரனாகவே இருக்க விரும்புகிறேன். முடிந்த அளவு அதிமுகவை ஒருங்கிணைக்க போராடுகிறேன். இல்லை எனில் நடப்பது நடக்கட்டும் என ஆணித்தரமாக பதில் தந்ததாம்’’ செங்கோட்டையன் தரப்பு. இதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்காக தூது போன இப்போதும் அதிமுகவில் இருக்கிற அந்த பிரமுகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனராம்.