தி.மு.க. கூட்டணியில் மக்கள் நிதி மய்யம் கமல்ஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவது உறுதியாகியுள்ள நிலையில், அ.தி.மு.க.வில் தே.மு.தி.க.விற்கு ஒரு ராஜ்யசபா உறுதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தார் பிரேமலதா விஜயகாந்த்!
‘‘அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. தேமுதிகவின் ராஜ்யசபா வேட்பாளர் யார்? என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். வெறும் பேச்சுவார்த்தை மட்டுமல்ல ஏற்கனவே ஒப்பந்தம் போட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என மாநிலங்களவை எம்.பி. குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு பிரமேலதா பதில் அளித்தார்.