பொதுவாக பலர் கடவுள் நம்பிக்கை இல்லை என்பார்கள். ஆனால், அவர்கள்தான் அதிகம் மனதிற்குள் கடவுளை நினைப்பார்கள். அதே போல்தான் கடவுளே இல்லை என்று சொல்லும் கட்சியினர்தான் அடிக்கடி கோவிலுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடுவதை கண்கூடாக பார்க்கிறோம்.

அதே போல்தான் ஜோசியமும்… அதாவது ஜாகத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்பார்கள். ஆனால், அவர்கள்தான் அடிக்கடி ஜாதக ரீதியிலான பலன்களை பார்ப்பார்கள். பொதுவாக கடவுளும், ஜாதகமும் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து பலன் கிடைக்கும் என ஜோசியர்கள் சொல்வதுண்டு.அந்த வகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனும், ராகுவும் ஒன்றிணைவதால் 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கொட்டப் போகிறது.

பொதுவாக ராகு பகவான் என்பது நிழல் கிரகமாகும். ஜோதிடத்தில் ராகுவை தீய கிரகமாகவும் பார்க்கப்படுகிறது. நம்முடைய எண்ணங்களையும், மனநிலையையும் பாதிக்கும் கிரகமாக இந்த ராகு பகவான் உள்ளது. ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பகவான் பலவீனமான நிலையில் இருந்தால் அசுப பலன்களையும், மோசமான பலன்களையும் கொடுக்கும்.

ராகு என்றாலே மக்கள் பயப்படுவதற்கு காரணமே அசுப பலன்களை கொடுக்கும் கிரகம் என்பதால்தான். ஜாதகருக்கு ராகு தோஷம் இருந்தால் தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு வகையிலான பிரச்சனைகளை அதிகளவில் சந்திப்பார்கள். பொருளாதாரத்திலும் சிக்கல்கள் ஏற்படும். இதெல்லாம் ஒருபக்கம் இருப்பினும் ராகு பகவான் எல்லா நேரங்களிலும் மோசமான பலன்களை மட்டுமே தருவதில்லை. ஜாதகத்தில் ராகு கிரகம் வலிமையான, நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கையில் நிறைய நல்ல வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

மீன ராசியில் ராகு பகவான் தற்போது இடம்பெயர்ந்துள்ளார். அதேபோல, சுக்கிர பகவானும் மீனத்தில் சுக்கிர பகவான் நிலை கொண்டுள்ளார். சுக்கிர பகவானும் ராகுவும் ஒன்றிணையும்போது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டங்கள் கொட்டும்.

சுக்கிரன் பகவானும், ராகு பகவானும் மீன ராசியில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்துள்ளனர். ராகு, சுக்கிரனின் இந்த இணைவால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. ராகு பகவான், சுக்கிரன் பகவானின் இந்த இணைவால் எந்தெந்த ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்: ராகு பகவான் மற்றும் சுக்கிர பகவானின் இணைவானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கப் போகிறது. அபரிமிதமான பணப் பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கும். நல்ல முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மிகுந்த காலமாக இருக்கும்.

கடகம்: மீன ராசியில் ராகு பகவான், சுக்கிர பகவானின் இணைவால் கடக ராசிக்காரர்களுக்கு பல்வேறு விதமான நற்பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் லாபத்தைக் காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்தாலும் அதில் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுவது நல்லது. யோசித்து செயல்படுவது அவசியம். இதுவரை இழுபறியாக இருந்த வந்த, தடைப்பட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

மீனம்: மீன ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் இணைவு நடைபெறவுள்ளது. இந்த இணைவானது மீன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெறுவீர்கள். நிலுவையில் இருந்து வந்த கடன்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நல்ல செய்திகள், வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். நிதி முன்னேற்றத்திற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

ராஜயோகம் கொட்டப் போகிறது என்று சொன்னவுடன் வீட்டில் படுத்துக் கொண்டு இருந்தால் கிடைக்குமா? அதற்கேற்ப உழைப்பையும் கொடுக்க வேண்டுமே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal