சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 29ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கழகப் பொதுச் செயலாளர் துறை முருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2025 புதன் கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, கழக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்தார். இதில் ஒன்றிய அரசின் 2025-26ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.