‘‘ஆண்கள், பெண்களை பாதிக்கும் பொன்னுக்கு வீங்கி (MUMPS) நோய் ஒரே ஆண்டில் 8 மடங்கு பரவியநிலையில், சுகாதாரத் துறை நிர்வாக சீர்கேட்டால் தமிழகமே நோய் பரவல் மாநிலத்தில் முதலிடமாக உள்ளது’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா.சரவணன் கடுமையாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
அ.தி.மு.க. மருத்துவரணி இணைச்செயளாலர் மதுரை டாக்டர் பா.சரவணன் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘மதுரை தமிழகத்தில் தற்போது பொன்னுக்கு வீங்கி (MUMPS) நோய் பரவல் அதிகரித்து வருகிறது, இந்த நோய் பாராமிக்சோ எனும் வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது, இது காற்றில் எளிதாக பரவக்கூடியது.
இந்த நோய் காதுக்கு முன்பாக இருபுறமும் உமிழ்நீர் சுரப்பியின் வீக்கம் தான் இந்த நோயின் அறிகுறி ஆகும், இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் இடது அல்லது வலது காதுக்கு கீழே பெரிய வீக்கம் தென்படும்,காது கீழே வலி ஏற்படும், மேலும் காய்ச்சல், உடல் சோர்வு ஏற்படும். இந்த நோய் அறிகுறி தென்படுவதற்கு முன்னதாக மற்றவருக்கு அந்த நோய் பரவும் வாய்ப்பு உள்ளது ஒருவர் மூலம் 12 பேருக்கு இது பரவும்.
இந்த நோய் வெகுகாலமும் சமூகத்தில் இருந்து வந்தது ஆனால் தற்போது அதிகரித்து வருகிறது 2021-2022 ஆண்டில் 61 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது, 2022-2023ஆண்டில் 129 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது, தற்போது 2023-2024 ஆண்டில் 1091 பேருக்கு ஏற்பட்டுள்ளது அதாவது 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்தில் 0.07 பேருக்கு இருந்து, தற்போது 2024 இல் 1.3 ஆக அதிகரித்துவிட்டது. தற்போது கடந்த ஆறு மாதத்தில் மேலும் அதிகரித்து உள்ளது ஒரே ஆண்டில் 8 சகவீதம் அதிகரித்து உள்ளது இந்த நோய் சென்னையில் தான் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் கூறப்படுகிறது.
இந்த நோயால் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படும், அதனை தொடர்ந்து மூளை மற்றும் தண்டுவடம் சுற்றியுள்ள ஜவ்வுகள் பாதிப்பு, கணையம் பாதிப்பு, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, பெண்களுக்கு கர்ப்பபை பாதிப்பு ஆகியவை ஏற்படும். இந்த நோய்க்கு எதிராக குழந்தைகளுக்கு 15 மாதத்திற்கு பின்பு, அதனை தொடர்ந்து 5 வயதுக்குள் தடுப்பூசி போட வேண்டும் தற்போது மந்தை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது (HERD IMMUNITY) இதனால் இந்த நோய் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்த நோய் பாதிக்கப்படும் இடங்களை கண்டறிந்து மருத்துவ முகாம் நடத்தி தடுப்பூசிகளை போட வேண்டும். ஏனென்றால் வரும் முன்பே நோய்களைத் தடுப்பதில் நல்லது.
ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டுகள் முன்பு உலகம் முழுவதும் மீண்டும் போலியோ நோய் வந்தது ஏனென்றால் போலியோ கட்டுப்படுத்தி விட்டோம் என்ற காரணத்தில் சிலர் போலியோ சொட்டுமருத்து போட்டுக் கொள்ளவில்லை, இதனை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து செய்தி வெளியிட்டுது. இதனை தொடர்ந்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு முன்னோடியாக எடப்பாடியார் தமிழகத்தில் மீண்டும் போலியோவை தடுப்பு முகாமை வெற்றிகரமாக செயல்படுத்தி தற்போது போலியோ இல்லாத தமிழகமாக உருவாக்க காரணமாக இருந்தார்.
தற்போது அதிகரித்து வரும் பொன்னுக்கு வீங்கி நோய் பரவால் குறித்து உலக சுகாதாரம் அமைப்பு கூட தற்போது உற்று நோக்கி வருகிறது, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிகமாக பரவல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆகவே சுகாதாரத்துறை தொடர்ந்து மெத்தன போக்கை காட்டாமல், மக்கள் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும், அப்படி இல்லை என்றால் நோய்கள் பரவலில் தமிழகம் முதலிடமாக மாறிவிடும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு. ஸ்டாலினுக்கும், அவரது மகன் உதயநிதிக்கும், பேரன் இன்பநிதிக்கும் பல்லாக்கு தூக்குவதை விட்டு, இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை செலுத்துவாரா?’’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் டாக்டர் சரவணன்.