தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. மீது கடுமையான அதிருப்தி இருக்கும் நிலையில் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பு செய்திருப்பதை மருது அழகுராஜ் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுதொடர்பாக மருது அழகுராஜ் தனது வலைதளப் பக்கத்தில், ‘‘#அடப்போங்கப்பா
தேர்தல் ஜனநாயகம் சீரழிந்து வருகிறது என்பதற்கு சாட்சியே பிரதான கட்சிகளின் தேர்தல் புறக்கணிப்பாகும்…
தேசத்தை ஆளுகிற கட்சி தேர்தல் முறைகேடுகளை முறியடித்து வெற்றி பெறுவோம் என்னும் உறுதியோடு ஈரோடு கிழக்கில் போட்டியிருக்க வேண்டும் அதற்கு மாறாக தேர்தலை புறக்கணித்திருப்பது தவறுகளிடம் தலை குனிவதாகும்…
பாப்பாபட்டி கீரிப்பட்டி போல அதிகார வர்க்கத்துக்கு அடிபணிந்திருப்பதோடு அரசியல் வாய்பப்பையும் புறக்கணிப்பாளர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதே உண்மை..!
என்ன நாஞ்
சொல்றது…’’ என பதிவிட்டிருக்கிறார்.