வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஜனவரி 3 ஆம் தேதி காலை தொடங்கிய சோதனை இன்று அதிகாலை முடிவுக்கு வந்திருக்கிறது.

மேலும் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் 2 நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. ஜன.3 முதல் நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை சுமார் 44 மணிநேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

8 கார்களில் வந்திருந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், 44 மணி நேர சோதனையை முடித்துக் கொண்டு துணை ராணுவ படையினருடன் நள்ளிரவு 2.40 மணிக்கு புறப்பட்டனர்.

கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள், கணினி ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறையினர் ரெய்டு முடிந்ததையொட்டி அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு 10.10 மணியளவில் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.இதற்கிடையில் வேலூர் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக சோதனை தொடர்ந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அமைச்சர் துரைமுருகன் புறப்பட்டு சென்றார். அவருடன் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உடன் சென்றுள்ளார்.

கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்துகொண்டிருக்கும்போதே துரைமுருகன் டெல்லிக்கு சென்றிருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடல்நிலையை காரணம் காட்டி டெல்லிக்கு செல்லாமல் இருந்து துரைமுருகன் நள்ளிரவில் டெல்லி சென்றடைந்துதான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal