‘‘தமிழக அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கும் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 16.12 சகவீதம் அதிகரித்து உள்ளது. திமுக ஆட்சியில் 18,518 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பது குற்றங்கள் அதிகரித்துள்ளது என்பதே சாட்சி அன்று கண்ணகி சாபம் மதுரையை பொசுக்கியது போல, இன்றைக்கு பெண்கள் சாபம் ஸ்டாலின் திமுக ஆட்சியை விரைவில் பொசிக்கிவிடும்’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் சரமாரி குற்றச்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு-க. மருத்துவரணி இணைச் செயலாளர் மதுரை டாக்டர் பா.சரவணன் கூறியதாவது, ‘‘புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆகியோர் காலங்கள் எல்லாம் பெண்களுக்கு பொற்காலமாக இருந்தது ,பெண்களுக்கான திட்டங்களைத் தந்தது மட்டுமல்லாது பெண் சமுதாயத்திற்கு காவல் அரனாக இருந்தார்கள். குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக்க மாநிலமாக சென்னை,கோவை போன்ற நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றது மேலும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களும் தடுக்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 43 மாத திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் கேள்விக்குறியாக உள்ளது குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து தான் வருகிறது. இன்றைக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவியை திமுக கட்சியை சேர்ந்த ஞானசேகர் என்பவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது என்ற சம்பவம் நெஞ்சை உலுக்கி உள்ளது. எதுக்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்று மார்தட்டி தட்டிக் கொள்ள முடியுமா?

இன்றைக்கு தமிழகத்தில் 50 க்கு மேற்பட்ட அரசு துறைகள் உள்ளது இந்த துறைகளில் அமைச்சர்கள் பொறுப்பு வகிக்கின்றனர். இந்த துறைகளில் சீர்கேடு அடைந்தால் முதலமைச்சர் எச்சரிக்கை செய்யலாம்.ஆனால் இன்றைக்கு முதலமைச்சர் கையில் வைத்திருக்கும் உள்துறையே இன்றைக்கு சீர்கெட்டு போய்விட்டது அப்படி என்றால் இதை எச்சரிக்கை செய்வது எடப்பாடியாரின் கடமை அல்லவா?

இன்றைக்கு திமுக 2021 ஆண்டுஆட்சி பொறுப்பை ஏற்ற முதல் தற்போது வரை ஏறத்தாழ 18,518போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது இதன் முலம் குழந்தைங்களுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்பது சாட்சியாக உள்ளது. இதில் வழக்கு மட்டும்தான் போடப்பட்டுள்ளது இதுவரை எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று விவரம் இன்னும் கூறப்படவில்லை.

மேலும் மலைவாழ் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் குற்றங்கள் அதிகரித்துள்ளது ஒரு லட்சம் நபருக்கு 3.9 சகவீதமாக இருந்த குற்றம் எண்ணிக்கை, இன்றைக்கு 8.4 உயர்ந்துள்ளது, அதேபோல பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் எடுத்துக் கொண்டால் ஒரு லட்சம் நபர்களுக்கு 20.33 சகவீதம் தான் இருந்தது ஆனால் இன்றைக்கு 33.93 சகவீதமாக உயர்ந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த 43 காலத்தில் மட்டும் பெண்கள் நேரடியாகவும் புகார் கொடுத்தும், மறைமுகமாகவும் புகார் கொடுத்து வருகின்றனர் சிலர் தங்கள் மானம் பறிபோய் விடுமோ என்ற பயத்தால் வழக்கும் தொடுக்காமல் உள்ளனர் மேலும் காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலகம் மட்டும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து தான் உள்ளது இதன்மூலம் இன்றைக்கு 16.12 சதவீதம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளன. ஆனால் திமுக அமைச்சர்கள் கூட மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு கூறி நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.

இதே கனிமொழி நடத்திய திமுக மாநாட்டில் பெண் காவலர் மீது திமுகவினர் பாலியல் தொந்தரவு கொடுத்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணிபுரிந்த பட்டியல் இன சிறுமி மீது வன்கொடுமையை அவரது மகன் செய்தார், அதேபோல கிருஷ்ணகிரி அருகே போலி என்.சி.சி.கேம்ப் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது, இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி மாணவிகளுக்கு எதிரான பாலியல் சம்பவம் குறித்து தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது இதன் மூலம் எந்தவித தடுப்பு நடவடிக்கைகள் கிடையாது இது போன்ற கூட்டங்கள் எல்லாம் கண் துடைப்பு தான். இன்றைக்கு எடப்பாடியார் நடந்த சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறுகிறார், ஏனென்றால் இந்த விசாரணை நியாயமாக நடக்க முடியாது ஏற்கனவே கள்ளச்சாராயம் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று எடப்பாடியார் கூறினார் அதற்கு நீதிமன்றம் தமிழக அரசை குட்டு வைத்து சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறியுள்ளது.

அன்று கண்ணகி சாபம் மதுரையை பொசுக்கியது போல, இன்றைக்கு பெண்கள் சாபம் ஸ்டாலின் திமுக ஆட்சியை விரைவில் பொசிக்கிவிடும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த பெண் சமுதாயமும் எடப்பாடியாருக்கு வாக்களித்து, மீண்டும்தமிழகத்தின் முதலமைச்சராக்குவார்கள்’’ எனக் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal