ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக்குழு ஜனவரி 8ம் தேதி கூடுகிறது.

லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா டிசம்பர் 17ம் தேதி லோக்சபாவில் தாக்கலானது. யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாவும் அன்றே தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா பார்லி. கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந் நிலையில், மொத்தம் 39 உறுப்பினர்கள் கொண்ட பார்லி. கூட்டுக்குழு ஜன.8ல் கூடி இதுபற்றி விவாதிக்கிறது. கூட்டத்தில் சட்டத்துறை செயலாளர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்தும், அதனால் நாட்டுக்கும், மக்களுக்கும் கிடைக்ககூடிய பலன்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்க உள்ளனர்.

பார்லிமென்ட் கூட்டுக்குழு கூடி விவாதித்து, இந்த விவகாரத்தில் சில பரிந்துரைகளை வழங்கும். 90 நாட்களில் இந்த நிகழ்வுகள் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal