அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிரான தீர்மானங்களுக்கு ‘கண்டனம்’ என்றும், மோடி அரசுக்கு எதிரான தீர்மானங்களில் ‘வலியுறுத்தல்’ என்றும் சொல்லி பாஜக பாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் என தி.மு.க. இளைஞரணி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘எடப்பாடியே உங்கள் மண்டையை மறைத்தாலும், உங்கள் கொண்டையை மறைக்க முடியவில்லை’ என தி.மு.க. எஸ்.ஜோயல் கடும் கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயர் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமியும், மோடியும் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்துடன்,
‘‘“எடப்பாடியை அம்மணமாக்கிய தீர்மானங்கள்”
மோடியின் கள்ளத் தொடர்பு அடிமைகள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க நினைத்தாலும், அவர்களது பொதுக்குழு தீர்மானங்களே அவர்களின் பச்சோந்தி நிறத்தை படம் பிடித்து காட்டிக் கொடுத்து விட்டது.
திராவிட மாடல் நாயகர்; அன்னைத் தமிழகத்தின் தன்னிகரில்லா முதல்வர் அவர்களும்,
எதிர்கால தமிழகம்… இளம் தலைவர்; துணை முதலமைச்சர் அவர்களும்… வழிநடத்துகிற மக்கள் போற்றும் ஆட்சி மீது கண்டனம்… கண்டனம்… என கண்டனத்தை கங்கணம் கட்டி ஆடும் எடப்பாடியே..!
‘வெள்ள நிவாரணத்திற்கு கிள்ளிக் கூட தராமல்.. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என ஜனநாயகத்தை வேட்டையாடத் துடிக்கிற, நச்சுத்திட்டமாம் டங்ஸ்டன் சுரங்கத்தின் மூலம் மதுரை மண்ணை அழிக்கத் துடிக்கிற மோடிக்கு ‘கண்டனம்’ என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்த தெம்பு, திராணி இல்லாமல்,
பம்மி…பம்மி… வலியுறுத்தல்…வலியுறுத்தல்… என்று அடிமை மொழியில் வாஞ்சையாய் தடவிக் கொடுத்திருக்கிறார்.’
எடப்பாடி உங்கள் மண்டையை மறைத்தாலும், கொண்டையை மறைக்க முடியவில்லை.
மோடியைப் பார்த்து ஒரு கண்டனம் தெரிவிக்கக்கூட முடியாத முதுகெலும்பு இல்லாத நீங்கள், தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவர் எங்கள் முதல்வரின் ஆட்சியைப் பற்றி விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது…?
உங்கள் தீர்மானங்களே உங்களின் கள்ளத் தொடர்பை அம்மணமாக்கி விட்டன..!’’ என பதிவிட்டிருக்கிறார்.