‘‘பெஞ்சால் புயலால் 37 ஆயிரம் பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ முகாம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெற்றனர் என்பதை அமைச்சர் மா.சு.பட்டியல் வெளியிடுவாரா?’’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக மருத்துவரணி இணைச் செயளாலர் டாக்டர் பா.சரவணன் கூறியதாவது; ‘‘புரட்சித்தமிழர் எடப்பாடியார் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி எளிமையாக கிடைக்க 2000 ‘அம்மா மினி கிளினிக்’கை உருவாக்கினார், இதன் மூலம் மாதம் தோறும் ஏறத்தாழ 22 லட்சம் பேர் பயன்பட்டனர்.
அந்தத் திட்டத்தை ஸ்டாலின் அரசு நிறுத்திவிட்டு ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை உருவாக்கினார்கள், இந்த திட்டத்தில் 10,959 சுகாதார தன்னாலர்களை நாளொன்றுக்கு 183 ரூபாய் மாதம் 5500-க்கு அமர்த்தினார்கள். இதில் உபகரண பராமரிப்பு, செலவு எழுது பொருட்கள், போக்குவரத்து செலவு ஆகியவற்றை உள்ளடக்கி வழங்கப்பட்டது மேலும்அதிகளவில் பணி சுமை வழங்கப்பட்டது இதில் சம்பளம் கட்டுபடி ஆகாமலும், பணிச்சுமை காரணமாக ஏராளமானோர் ஓட்டம் பிடித்து விட்டனர்.
ஆனால் இந்தத் திட்டத்தை வெற்றிகரமான திட்டம் என்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கும் வகையில் ஒரு நோயாளியின் தரவுகளை இரண்டு மற்றும் மூன்று முறை பதிவு செய்து கணக்கு காட்டி வருகிறார்கள்.
மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த திட்டத்தில் 5.93 கோடி பயன் பெற்றதாக கூறுகிறார்கள், இதனைத் தொடர்ந்து அதே மாதம் அமைச்சர் மா.சு.ஒரு விழாவில் 1.86 கோடி அளவில் பயன்பட்டதாக கூறுகிறார் இதுவரை பயன் பெற்றவர்களின் பட்டியல்கள் எல்லாம் முன்னுக்கு பின் முரணாகத் தான் உள்ளது.
சமீபத்தில் பெஞ்சால் புயல் ஏற்பட்டது இதில் ஏறத்தாழ 37 ஆயிரம் மக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் மக்கள் வீட்டிலே முடங்கி இருந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலமும், மருத்துவ முகாம் மூலமும் பயன்பெற்ற பட்டியலை அமைச்சர் மா.சு வெளியிடதயாரா ?
கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 243 கோடியில் புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும், 333 கோடியில் துணை சுகாதார மைய முதல் மருத்துவக் கல்லூரி வரை அனைத்து நிலையில் உள்ள கட்டமைப்புகள் தரம் உயர்த்தப்படும் கூறினார்கள் இதுவரை எந்த பணியும் நடைபெற்றதாக தெரியவில்லை.
அதேபோல் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, தமிழகம் முழுவதும் 250 மேற்பட்ட போதை ஒழிப்பு மையங்கள் உள்ளதாக கூறப்படுகிறது இதில் தனியார் மையங்கள் அதிக அளவில் உள்ளது, இதில் அனுமதி பெறாமல் சில இயங்கி வருகிறது இதையெல்லாம் அரசு கவனிக்கிறதா என்பது கூட தெரியவில்லை?
மக்களை காக்கும் பொறுப்பில் இருக்கும் அமைச்சர் மா.சு. பதவியை தக்க வைக்க உதயநிதிக்கு விழா எடுப்பதை மட்டும் கவனிக்காமல், மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்’’ என கூறினார்.