‘‘தமிழ்நாட்டில் நடைபெறும் அவலநிலைகளை நாள்தோறும் தோல்உரித்து காட்டும் அ-.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் குற்றச்சாட்டை மதிப்பது இல்லை என்று ஸ்டாலின் கூறுவது முதல்வர் பதவிக்கு இலக்கணம் அல்ல? 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட தி.மு.க. அமர வாய்ப்பிருக்காது’’ அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக அ.தி.மு.க. மருத்துவரணி இணை செயலாளர் டாக்டர் பா.சரவணன் கூறியதாவது; ‘‘தமிழகத்தில் ஸ்டாலின் திமுக அரசு என்றைக்கு பொறுப்பு ஏற்றதோ அன்று முதல் இன்று வரை மக்கள் மக்கள் எண்ணற்ற துயரம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக சொத்து வரி உயர்வு, மின் கட்டண வரி உயர்வு, பால் விலை உயர்வு, அத்யாச பொருள்கள் விலை உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு இது போன்ற விலைவாசி உயர்வால் மக்களை கசக்கிப் புரிந்து வருகிறது ஸ்டாலின் அரசு.

இதனால் மக்கள் படும் அவதிகளை பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்டாலின் அரசுக்கு மக்களின் மனசாட்சியாக திகழும் எடப்பாடியார் பாடம் புகட்டி வருகிறார், மேலும் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது, அதேபோல் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது என்று நாள்தோறும் சுட்டிக்காட்டி வருகிறார். அதே போல் இந்தியாவிலே அதிக கடன் சுமை மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது, அதேபோல் சுகாதாரத்துறை எடுத்துக் கொண்டால் 11,000 மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை, செவிலியர் பற்றாக்குறை மருந்துகள் பற்றாக்குறை இந்த நிலையில் தான் பார்க்க முடிகிறது, அரசு மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கிறது மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 4,000 கோடியில் பணிகளை செய்துள்ளோம் ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது என்று கூறினார்கள். ஆனால் சென்னை மழை நீரால் ஆறு போல காட்சி அளித்தது அந்த 4,000 கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை? தற்போது கூட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடியார் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டு மக்களுக்கு நிவாரண வழங்கி ஆறுதல் கூறி வருகிறார், தொடர்ந்து அந்த மக்களின் பிரச்சினைகளை அறிக்கை வாயலாகவும், ஊடகத்தின் வாயிலாகவும் பேட்டி அளித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அரசுக்கு வலியுறுத்தி தனத் கடமையாற்றி வருகிறார்.

ஒரு அரசின் கடமை என்றால் எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் ஆனால் இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு பக்குவமில்லாமல் பேசுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் கருத்துக்களை கூறுகிறார், குற்றச்சாட்டுகளை கூறுகிறார் ஆனால் அதை நாங்கள் மதிப்பதில்லை என்பது ஸ்டாலின் கூறுவது முதலமைச்சர் பதவி அழகு அல்ல,முதலமைச்சர் பதவி பதவிக்கு இலக்கணம் அல்ல.

ரோம் நகர் பற்றி பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசிப்பது போல, இன்றைக்கு தமிழக மக்கள் படும் துயரங்களைப் பற்றி கவலைப்படாமல், தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆகிவிட்டோம், எப்படியாவது முதலமைச்சராக்கிவிட வேண்டும் என்ற கனவில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும், நாங்கள் மதிப்பதில்லை என்று ஆணவத்துடன் பேசி வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட மக்கள் வழங்க மாட்டார்கள். மக்களுக்காக உழைக்கும், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வரும் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவார்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை’’ என டாக்டர் சரவணன் கூறியிருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal