கோவையில் நடந்த அதிமுக களஆய்வு கூட்டத்தில் எஸ்பி.வேலுமணி பேசியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கோவை சுங்கம் பகுதியில் கள ஆய்வு குழு கூட்டம் நேற்று நடந்தது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன், எம்எல்ஏ கேஆர் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி பேசி கொண்டிருந்தபோது ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கட்சி தொண்டர் ஜெயராஜ் மற்றும் சிலர், ‘‘நீங்கள் மட்டுமே பேசுகிறீர்கள். எங்கள் கருத்தை யாரும் கேட்கவில்லை. ஏன் தோற்றுப் போனோம் என சொல்ல விடமாட்டீர்களா?’’ என கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சில நிர்வாகிகள் அவர்களை, ‘‘சத்தம் போடாதீர்கள். அமைதியாக இருங்கள். நாங்கள் சொல்வதை கேளுங்கள்’’ என அதட்டினர். ஆனால் அவர்கள், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டனர். கள ஆய்வு கூட்டத்தில் எஸ்பி. வேலுமணி பேசியபோதே எதிர்ப்பு எழுந்தது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.