‘வருகிற 2026 தேர்தல் களம் தி.மு.க.வுக்கு மீண்டும் ஒரு வசந்த காலம்’ என தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரத்தை தனது எழுத்து நடையில்¢ தெளிவுபடுத்திக் காட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ். ஆதரவாளரும், அரசியல் விமர்சகருமான கவிஞர் மருது அழகுராஜ்!
‘கனவும்…. களமும்…’ என்ற தலைப்பில் தனது வலைதளப் பக்கத்தில் மருது அழகுராஜ்,
‘‘திமுக கூட்டணி குறைந்த பட்சம் 35 சதவீத வாக்குகளை பெற்றாலும் கூட எஞ்சியுள்ள 65 சதவீதத்தை எடப்பாடி திமுக மற்றும் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி…
அத்துடன் விஜய்யின் த.வெ.க. கூட்டணி இவற்றோடு சீமான் மற்றும் நோட்டாஆகியோர் பல திசைகளிலும் பிரிக்கும் வாக்குகளால் திமுகவே மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் சூழலே உருவாகும்.
ஒருவேளை ஒன்றுபட்ட அதிமுக உருவாகி அது பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ. -யுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும்…
அன்றைய மக்கள் நலக்கூட்டணி போலவிஜய் தலைமையில் அமையும் கூட்டணி களம் புகுந்து திமுக வாக்குகளில் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினால் மட்டுமே ஆட்சி மாற்றத்துக்கான வாய்ப்பு உருவாகும்..
இது…
இலங்கை பாகிஸ்தானிடம் தோற்று பாகிஸ்தான் ஜிம்பாபேயிடம் தோற்றால் ஃபைனனில் பங்களாதேசத்தை ஜெயித்து நாம் எளிதாக கோப்பையை கொய்து விடலாம் என்கிற கிரிக்கெட் பிரியர்களின் நப்பைசையை போன்றதே…
ஆக மக்களிடம் கசந்து நிற்கும் திமுக தனது கூட்டணியை தக்க வைப்பதன் மூலமும் பிளந்து கிடக்கும் எதிர்கட்சி மற்றும் சிதறிக் கிடக்கும் அதன் திமுகவின் எதிர் வாக்குகளாலும் மீண்டும் ஒரு வசந்த காலத்தை வரவு வைத்துக் கொள்ளும் வாய்ப்பு திமுக வுக்கு இன்றளவில் பிரகாசமாக இருக்கிறதே என்பதே நிஜம்.
ஆனாலும் தேர்தலுக்கு ஏறத்தாழ 16 மாதங்கள் இருப்பதால் திமுகவின் வாய்ப்பு என்பது கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டதே…
என்ன நாஞ் சொல்றது…’’ என்று பதிவிட்டிருக்கிறார்.